தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,; கோவை குறுந்தொழில் சங்க தலைவர் தவம்
கோவை: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் கோவை கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க தலைவர் 2 ஆண்டுகளாக தலைமுடி, மீசை எடுக்காமல், தவக்கோலத்தில் மாறியுள்ளார்.
கோவை மாவட்டம் கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் (கோஜிம்வா) தலைவர் திருமலை ரவி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கிரில் உற்பத்தி சார்ந்து 3,600 நிறுவனங்கள் உள்ளன. கோவை மாநகர், மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர் என்று மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளோம். கிரில் உற்பத்திக்காக சிட்கோ பூங்கா அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகிறோம்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவையில் தொழில்துறையினருடன் உரையாடினார். கோவைக்காக தனி தேர்தல் அறிக்கையும் தி.மு.க., வெளியிட்டது. அதில் கோவையில் கிரில் தயாரிப்புக்கு பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். பூங்கா அமைந்தால், சொந்தமாக தொழிற்கூடம் இல்லாதவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்தோம்.
அதை 2025 நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றுவோம் என்றனர். பலமுறை நினைவூட்டியும் செயல்படுத்தவில்லை. எங்களுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட் தொடர்ச்சியாக கேட்கிறோம். எங்களில் 90 சதவீத நிறுவனங்கள் வாடகை கட்டடத்தில் தான் உள்ளோம். மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
மின்சாரத்துக்குநிலைக்கட்டணம் நிர்ணயித்திருப்பதால், நாங்கள் பயன்படுத்தாவிடினும் மின் கட்டணம் கட்டியாக வேண்டும். மூலப்பொருட்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு கூட, பணம் கொடுக்க முடியாதளவுக்கு நெருக்கடியில் உள்ளோம். மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
கிரில் உற்பத்தியில் ஒரு லட்சம் தொழில்முனைவோர், 6 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறோம். எங்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கேட்டோம். 2024 தேர்தல் வாக்குறுதியிலேயே குறிப்பிட்டதால், எப்படியும் கிரில் பூங்கா வந்துவிடும் என்று நான் உறுதியாக நம்பினேன். கிரில் பூங்கா அமைந்த பிறகு தான் என்னுடைய தலைமுடி, மீசை, தாடி எடுப்பேன் என்று எங்கள் உறுப்பினர்களிடம் சொன்னேன். 2 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
விரக்தியில் நானும் 2 ஆண்டுகளாக தலைமுடி, தாடி வெட்டவில்லை. இப்போது பார்ப்பதற்கு, 'அகோரி' போல மாறிவிட்டேன். கடந்த 2025 செப்டம்பரில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேறவில்லை. நிறைய போராடி சோர்ந்துவிட்டோம். கிரில் பூங்கா அமைக்கும் வரை தலை முடி மற்றும் தாடி எடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். தேர்தல் முடிந்த பிறகாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, திருமலை கூறினார்.
ஐயா காமெடி கீமடி பண்ணலையே? நீங்க பண்றது பச்சைப் புள்ளைத்தனமா இருக்கு. திராவிஷ ரவுடிக் கும்பல் இந்த வியாபாரத்தில் நல்ல லாபம் இருந்திருந்தால் எப்பவோ உங்க பிஸினஸில் பங்கு கேட்டு ரவுடித் தனம் பண்ணியிருப்பார்கள். உங்களை வைத்து உழைக்காமல் சம்பாதிக்க முடியும் என்றால் இந்த திராவிஷ ரவுடிக் கும்பல் நீங்கள் கேட்கலாமலேயே உங்களைத் தேடி வரும்.
சார்,
இந்த மாதிரி பண்ணாதீங்க...
உங்கள மாதிரி எல்லா தமிழ்நாட்டு மக்களும் சபதம் எடுத்தால் முடி வெட்டுறவுங்க பிழைப்பு என்ன ஆகுறது?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேராசை... காளை மாட்டுல போய் பால் கறக்கணும்னு பேராசை படுறீங்க...
இன்னுமா ஸ்டாலினை நம்புகிறீர். அவர் அவர் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க எல்லா பொய்களையும் அவுத்து விடுவார்.. கொள்கை குடும்பமல்ல, அவருடையது கொள்ளையடிக்கும் குடும்பம்.
அவருடைய மனைவியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்து கோயில்களுக்கு போய் ஒரு டிராமா நடத்தும் பெண்மணி. அவ்வளவுதான். அடுத்தவன் தலையில் மிளகரைப்பதில் திமுக மாதிரி சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை.
மத்திய, மாநில ஆட்சி செய்கிற எந்த கட்சியும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய வரலாறு இல்லை.
காளை மாட்டில் பால் கறக்க தவமிருக்கும் அய்யா வாழ்க வளமுடன்!மேலும்
-
திருவிழாவில் தினமும் அம்மன் திருவீதி உலா
-
ஆடிவெள்ளி, தை வெள்ளி சிறப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 157.99 க்கு விற்பனை
-
நன்மைகளை வழங்கும் பவுர்ணமி பூஜை
-
அணையில் மதகுகள் மாற்றும் பணி: இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள்; பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்