100 சதவீதம் ஓட்டளிப்பதற்கு மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

ராமநாதபுரம்: கல்லாரி மாணவர்களிடையே 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேர்தல் எழுத்தறிவு சங்கம், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சப் கலெக்டர் திவ்யான்ஷீ நிகம் பேசுகையில், நாட்டின் அரசியலமைப்புகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் உரிமையை நிலை நாட்டும். ஓட்டு விற்பனை பொருள் அல்ல. அனைவரும் பொறுப்புடன் ஓட்டளிக்க வேண்டும் என்றார். மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி, திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement