மானாமதுரை பிடாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்
மானாமதுரை:மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் விழா வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடியேற்ற விழாவிற்காக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்சவர் பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயிலுக்கு வந்த பின்பு அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜைகளை செய்தனர்.
கோயிலின் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்தை நடத்தினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,தீபாராதனை நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது போது உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளது.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை