பள்ளி  ஆண்டு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மூலகொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் கணேசன் தலைமை வகித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பள்ளி செயலாளர் கார்த்திக் ராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் செங்கொடி வரவேற்றார். சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.--

Advertisement