நல்லாங்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
தேவகோட்டை;தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
தேவகோட்டையில் மண் வேலை செய்யும் மக்கள் குதிரை, மாடு பொம்மைகளை செய்தனர். அப்பகுதியில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து குதிரைகளுக்கும் பூஜை செய்து அங்கிருந்து தேவகோட்டை இறகுசேரி, நல்லாங்குடி உள்ளிட்ட கிராமத்தினர் நேர்த்திக்கடனாக புரவிகளை சுமந்து நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலை அடைந்தனர் . விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல்லை ஓலை பெட்டிகளில் எடுத்து வந்து மண் குதிரை காலடியில் கொட்டி வணங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement