ஒரு ரன்னில் குஜராத் வெற்றி: கடைசி பந்து வரை 'டென்ஷன்'
டில்லி: கடைசி பந்து வரை 'டென்ஷனாக' சென்ற லீக் போட்டியில் குஜராத் அணி ஒரு ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. டில்லி அணி ஏமாற்றியது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பட்லர் அபாரம்: குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் (12) சோபிக்கவில்லை. அக்சர் படேல் வீசிய 4வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பட்லர், முகேஷ் வீசிய 5வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய பட்லர், 24 பந்தில் அரைசதம் எட்டினார். குல்தீப் யாதவ் 'சுழலில்' பட்லர் (52) சிக்கினார்.
சூப்பர் சுப்மன்: விப்ராஜ் நிகாம் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் வாஷிங்டன் சுந்தர். விப்ராஜ், குல்தீப் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கேப்டன் சுப்மன் கில், நிகிடி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 33 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது நிகிடி 'வேகத்தில்' சுப்மன் (70 ரன், 5X6, 4X4) வெளியேறினார்.நடராஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்த வாஷிங்டன் (55), முகேஷ் பந்தில் அவுட்டானார். குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 210 ரன் எடுத்தது. பிலிப்ஸ் (14), ராகுல் டிவாட்டியா (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் முகேஷ் 2, நிகிடி, குல்தீப் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ராகுல் அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பதும் நிசங்கா, லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' நிசங்கா (41) வெளியேறினார். பிரசித் கிருஷ்ணா வீசிய 9வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய ராகுல், 29 பந்தில் அரைசதம் கடந்தார். ரஷித் கான் 'சுழலில்' நிதிஷ் ராணா (5), சமீர் ரிஸ்வி (0) சிக்கினர். தொடர்ந்து அசத்திய ரஷித் கான் பந்தில் கேப்டன் அக்சர் படேல் (2) அவுட்டானார். டிரிஸ்பன் ஸ்டப்ஸ் (7) 'ரன்-அவுட்' ஆனார். சிராஜ் 'வேகத்தில்' ராகுல் (92 ரன், 4X6, 11X4) அவுட்டானார். சிராஜ் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் டேவிட் மில்லர்.
'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா பந்துவீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய விப்ராஜ் (12), அடுத்த பந்தில் அவுட்டானார். மூன்றாவது பந்தில் குல்தீப் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், 5வது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் குல்தீப் (1) அவுட்டானார்.
டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. மில்லர் (41) அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மில்லர் கொஞ்சம் யோசித்து ஆடியிருந்தால் டெல்லி அணிக்கு வெற்றி நிச்சயம் கிடைத்திருக்கும்.மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை