சாதித்தது என்ன?

1

போர் நிறுத்தம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. போர் தொடங்குவதற்கு முன்னரே, அது திறந்து தான் இருந்தது. தற்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. அப்படியென்றால், 39 நாட்கள் நடந்த இந்த மோதலால், அமெரிக்கா சாதித்தது என்ன? இந்த போர், அநீதியானது.

ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

தப்புக்கணக்கு!





மேற்கு வங்கத்தில் உண்மையான வாக்காளர்கள் பலரை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது. இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். இதன் மூலம் திரிணமுல் காங்கிரசை தேர்தலில் தோற்கடித்து விடலாம் என, பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் தப்புக்கணக்கு போடுகின்றன. இது, மேற்கு வங்கத்தில் எடுபடாது.

மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி

தோல்வி பயம்!



வேட்புமனுவில் நான் எந்த விபரங்களையும் மறைக்கவில்லை. காங்கிரசும், இடதுசாரியும் கூட்டு சேர்ந்து, தோல்வி பயத்தால் என் மீது வீண்பழி சுமத்துகின்றன. அவர்களிடம் ஆதாரம் இருந்தால் தேர்தல் கமிஷன் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாமே? இந்த இரு கட்சிகளும் தோல்வி அடைவது உறுதி.

ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

Advertisement