போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் சரிந்தது!
புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர், தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை நேற்று உடனடியாக 15 சதவீதத்துக்கு மேல் சரிந்து, மீண்டும் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டாலருக்கு கீழ் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீதான ராணுவ தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதற்கு முக்கிய நிபந்தனையாக, சர்வதேச எண்ணெய் வினியோகத்தில், 20 சதவீத பங்கு வகிக்கும் 'ஹார்முஸ்' ஜலசந்தியை ஈரான் முழுமையாக திறக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு ஈரான் சம்மதித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக சரிந்தது.
மிகப்பெரிய நிவாரணம்
இதையடுத்து, 'பிரென்ட்' வகை கச்சா எண்ணெய் விலை நேற்று மாலை நிலவரப்படி 15 சதவீதம் சரிந்து, 91.50 அமெரிக்க டாலராக குறைந்தது; இது, நேற்று முன்தினம் 109 டாலராக இருந்தது. இதேபோல், அமெரிக்க டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வீழ்ந்து, 91.05 டாலராக குறைந்தது.
கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நம் நாட்டுக்கு, இது மிகப்பெரிய நிவாரணமாகும். இதனால், நாட்டில் பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.
அச்சம் நீங்கியுள்ளது
சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்த போதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
தற்போது சர்வதேச விலை சரிந்துள்ளதால், இனி பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்ற அச்சம் நீங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், சரக்கு கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் முதல், சில மாதங்கள் வரை ஆகலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
@block_B@
போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடன், முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை அவசர அவசரமாக விற்க துவங்கியதால், எம்.சி.எக்ஸ். எனப்படும் 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்'சில், கச்சா எண்ணெய் மீதான முதலீட்டிற்கான விலை 18 சதவீதம் சரிந்தது. ஏப்ரல் மாத முதலீட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் பேரல் ஒன்றுக்கு 10,990 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் 8,594 ரூபாயாக குறைந்தது. மே மாதத்திற்கான ஒப்பந்தம் 8,012 ரூபாயாக உள்ளது. போர் துவங்குமுன், பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் விலை 6,106 ரூபாயாக இருந்தது. போர் பதற்றம் காரணமாக 80 சதவீதம் வரை விலை உயர்ந்த நிலையில், தற்போது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.block_B
எப்போதும் vivek என்னை ஆதரித்துதான் கருத்தை போடுவார் அதற்காக அவருக்கு
நன்றி
ஹோர்முஸ் ஜலசந்தியில் கடந்து செல்லும் கப்பல்களுக்கு ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் கூட்டாக சேர்ந்து கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளன. இத்தொகையை ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் ஒவ்வொரு கப்பலிடமும் ஈரான் $ 2 மில்லியன் டாலர் சுங்கக் கட்டணமாக வசூலித்தால் (கடந்த ஒரு மாதமாக அது செய்துவரும் நடைமுறை இதுவே) அதன் மூலம் மாதத்திற்கு சுமார் $ 8 பில்லியன் டாலர் வருவாயும், ஆண்டுக்கு ஏறத்தாழ $ 96 பில்லியன் டாலர் வருவாயும் ஈட்ட முடியும். இதன் விளைவாக, ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 475 பில்லியன் டாலரிலிருந்து 571 பில்லியன் டாலராக உயரும். இது 20%சதவீத வளர்ச்சியாகும்.
ஈரான் தங்களின் ஆற்றலை ஒருபோதும் உணர்ந்ததில்லை. இப்போது அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஹோர்முஸிலிருந்து அவர்கள் வசூலிக்கும் சுங்க வரியின் மூலம் உலகை ஆள்வார்கள்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) மற்ற நாடுகள் பேரம் பேசும் வாய்ப்புகளை இழந்துவிட்டன. அவர்கள் இனி ஈரானின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளன. இதற்காக ஈரான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குதான் நன்றி சொல்ல வேண்டும்! இதை நாம் நம்முடைய இந்துப் புராணங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். (ஈரான் அனுமன், அமெரிக்க அதிபர் ஜாம்பவான்). அனுமன் இலங்கைக்குப் பெரும் தாவல் செய்ய வேண்டியிருந்தபோது, ஜாம்பவான் அனுமனின் மறைந்திருந்த ஆற்றலை மீண்டும் உயிர்ப்பித்து நினைவூட்டுகிறார். அதன் பின்பே அனுமனுக்கு தன்னுடைய பலம் தெரிந்து வெற்றி பெறுகிறார்.
இந்த வருமானம் தற்காலிகமானதே. வளைகுடா நாடுகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்று வழிகளில் ஏற்கனவே இறங்கி விட்டன. சுமார் ஐந்து ஆறு ஆண்டுகளில் அது நடைமுறைக்கு வந்துவிடும்.
Yes.Gulf nations will not agree to pay.Irans idea only a proposal.Basically Hormuz is not with in sea level border of Iran
மாற்று வழிகளில் இறங்கினாலும் அதனால் ஏற்படும் செலவுகள் அதிகம் அதனால் அது தற்காலிகமானதே தவிர நிரந்தர தீர்வு அல்ல.
but sankar , Iran can send missiles to ship. can you go and stop
போர் எங்கு நின்றது?
வெட்டிபேச்சு வீரர் ட்ரம்பின் கோழைத்தனம் உலகுக்கு புலப்பட்டுவிட்டது. நாகரீக அழிவு என்று இவர் உளறியதற்கு மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்கா சொன்னா செஞ்சிபுடும் என்று பீலா விட்டார்கள். செய்யேன், செஞ்சுதான் பாரேன் என்று ஈரான் சொன்னதற்கு, கீ போர்டு வாரியார் ட்ரம்ப் அடிபணிந்துவிட்டார்.
please note hormuz was opened by Iran which is Trump s main demand for stopping war
yes noted sankar. that is good point..useless
no no sankar only opened hormuZமேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா