எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்: மாஜி அமைச்சர் சண்முகம் பிரசாரம்
திண்டிவனம்: எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என முன்னாள் அமைச்சர் சண்மும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மயிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சண்முகம் நேற்று காலை ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த சாத்தனுார், பாஞ்சாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது: உங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நீங்கள் கேட்காமலேயே நான் செய்து தருவேன். எந்த பிரச்னைகளையும் என்னிடம் சொல்லலாம். உங்களின் தேவைகள், உதவிகள் தைரியமாக தயங்காமல் சொல்லலாம். எப்போதும் வேண்டுமானாலும் என்னை நீங்கள் பார்க்கலாம். திண்டிவனத்திலுள்ள என்னுடைய வீட்டை தாண்டிதான் நீங்கள் போகனும். நான் உங்கள் கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது. வீட்டில்தான் உட்கார்ந்து இருப்பேன். நான் வெளியூர் சுற்றுகிற ஆள் கிடையது. திண்டிவனம், சென்னைக்கு தவிர வேறு எங்கேயும் போகமாட்டேன்.
நீங்கள் என்னிடம் போன் மூலம் கூட தகவல் தெரிவிக்கலாம். உங்கள் தேவை என்ன என்று எனக்கு மெசேஜ் போட்டால் போதும். அவசர உதவி, மருத்துவ உதவி தேவை என்றால் என்னிடம் நீங்கள் பேசலாம். என் தகுதிக்கு, என் வசதிக்கு, சக்திக்கு ஏற்ப உதவி செய்வேன். என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
மேலும்
-
நுால் விலை உயர்வால் பாதிப்பு
-
தி.கோட்டில் ரூ.2,000 கோடியில் திட்டங்கள் உதயசூரியனுக்கு ஓட்டுகேட்டு ஈஸ்வரன் பேச்சு
-
வெயில் தாக்கம் அதிகரிப்பு: கரும்பு 'ஜூஸ்' விற்பனை ஜோர்
-
ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
-
ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
-
ரூ.90 கோடியில் அதிநவீன பால் பண்ணை எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு