இரண்டாம் கட்டமாக ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு பணி இடங்கள் தேர்வு
விழுப்புரம்: சட்டசபை பொதுத்தேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ளவுள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் பணி நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஷாலிணி பண்டிட், பாவ்சாேஹப் தாங்கடே, ஓம்பிரகாஷ் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணி செய்யவுள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் பணி நடைபெற்றது.
இந்த பணியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு - தேசிய நெடுஞ்சாலைகள்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லுார்துசாமி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
-
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்