கல்வி வளர்ச்சியில் தி.மு.க., அரசு பெரும் பங்காற்றியுள்ளது: தே.மு.தி.க., வெங்கடேசன்
மயிலம் : தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியில் தி.மு.க., அரசு பெரும் பங்காற்றி வருகிறது என தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் பேசினார்.
மயிலம் சட்டசபை தொகுதி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து வல்லம் ஒன்றியத்தில் உள்ள அருகாவூர், பனப்பாக்கம்,ஏதாநிமிலி, நீர்பெருத்தஅகரம், மேல் ஒலக்கூர் உள்ளிட்ட பல கிராமங்களில் தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் பேசுகையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி தருவதாக முதல் அறிவித்துள்ளார்.
தி.மு.க., அரச கல்வி வளர்ச்சிக்கு பெருங்காற்றி வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் தங்குமிடம், உணவு வசதிகளுடன் 38 மாதிரி பள்ளிகள் துவங்கப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர்.
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் மாதிரி பள்ளிகளை கொண்டுவரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சி முழுக்க முழுக்க மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆட்சியாக செய்யப்பட்டு வருகிறது. எனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நீங்கள் எனக்கு முரசு சின்னத்தில் ஓட்டளிக்கவேண்டும் என பிரசாரம் செய்தார். இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
விமான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் ரூ.4,000 கோடியில் உத்தரவாத திட்டம்
-
குறைந்து வரும் வங்கி டிபாசிட் அதிகரிக்க ஆர்.பி.ஐ., ஆலோசனை
-
புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா நிபந்தனை
-
வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா செல்கிறது இந்திய குழு
-
நாட்டின் ஏற்றுமதி ரூ.80 லட்சம் கோடி
-
எட்டாம் கட்ட போராட்டம் தோல்வி; தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம்: தொழில்முனைவோர் கூட்டமைப்பு அறிவிப்பு