நாட்டின் ஏற்றுமதி ரூ.80 லட்சம் கோடி
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, கடந்த 2025 - 26 நிதியாண்டில் கிட்டத்தட்ட 80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை:
சேவை ஏற்றுமதி, 2025 - 26ல் 38.90 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, முந்தைய ஆண்டில் 36.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில் சேவை இறக்குமதி, 19.01 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
@block_B@ ஏற்றுமதி (ரூ. லட்சம் கோடியில்) 2024-25 76.75 2025-26 79.99 (4.22 % உயர்வு)block_B
@block_B@ இறக்குமதி (ரூ. லட்சம் கோடியில்) 2024-25 85.55 2025-26 90.21 (6.47% வளர்ச்சி)block_B
@block_B@ மார்ச்சில் சரிவு நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 7.44 சதவீதம் குறைந்து கிட்டத்தட்ட 3.62 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, இறக்குமதியும் கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 6.51 சதவீதம் குறைந்து 5.54 லட்சம் கோடி ரூபாய் ஆனது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மத்திய வர்த்தக செயலர் ராஜேஷ் அகர்வால், சவால்கள் இருந்தபோதிலும் நாட்டின் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். மேற்காசிய போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மார்ச்சில் 57.95 சதவீதம் சரிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அங்கிருந்து வரும் இறக்குமதியும் கடந்த மாதம் 51.64 சதவீதம் குறைந்துள்ளது.block_B
மேலும்
-
பிரசாரத்துக்கு வராத ராகுலை ஸ்டாலினால் மிரட்ட முடியுமா?: குஷ்பு கேள்வி
-
தேர்தலில் வெற்றி பாதிக்கக்கூடாது: வி.சி.க.,வினருக்கு திருமா அறிவுரை
-
பிரசாரத்துக்கு வராத ராகுலை ஸ்டாலினால் மிரட்ட முடியுமா? குஷ்பு கேள்வி
-
தி.மு.க., திட்டங்களை நம்பாமல் கூப்பனை நம்புகிறார் ஸ்டாலின்: அன்புமணி காட்டம்
-
போதமலை மக்களின் நுாற்றாண்டு கால கனவை நிறைவேற்றியது தி.மு.க., அரசு: அமைச்சர் பேச்சு
-
ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: தபால் ஓட்டுப்பதிவும் துவக்கம்