'ஆவின்' பாலக ஊழியரிடம் ரூ.24 லட்சம் பறிமுதல்

வியாசர்பாடி: 'ஆவின்' பாலக ஊழியரிடம் இருந்து, 24 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வியாசர்பாடி, எம்.பி.எம்., பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 24 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், மாதவரம், அருள் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார், 53 என்பதும், எம்.கே.பி.நகர், மணலி சாலை, 4வது பிரதான சாலையில் உள்ள 'ஆவின் பாலகம்' கடையில் பணி புரிவதும் தெரிய வந்தது. கடை உரிமையாளரின் அறிவுறுத்தலின்படி, அருகில் உள்ள வங்கியில் செலுத்த எடுத்து சென்றதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.





Advertisement