தி.மு.க., பிரசார வாகனம் ராயபுரத்தில் பறிமுதல்
ராயபுரம்: அனுமதியின்றி பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, தி.மு.க.,வின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.
ராயபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுபேர்கான் பிரசாரத்திற்கு பயன்படுத்திய 'டாடா ஏஸ்' வாகனத்திற்கு அனுமதி பெறவில்லை; அதை தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
வில்லிவாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் வினோத், 49, வாகனத்தை ஓட்டி வந்தது தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, வாகனத்தில் இருந்த தி.மு.க., கொடி, ஜெனரேட்டர், ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருங்காட்டுக்கோட்டை மேம்பாலத்தால்... நெரிசல் தீரும்! 4 மணி நேரத்தில் பெங்களூரு பறக்கலாம்
-
மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட வீல் சேர் தயார்
-
மாமல்லை வேக கண்காணிப்பு சாதனங்கள் வேறு இடங்களுக்கு மாற்றியமைப்பு
-
'டியூஷன் சென்டர்'களிலும் தி.மு.க., பிரசாரம்
-
இடைப்பாடி த.வெ.க., வேட்பாளர் எங்கே? சேலம் மேற்கு மா.செ., 'திடுக்' தகவல்
-
தாழ்வாக செல்லும் மின் கம்பியால் காரணித்தாங்கலில் விபத்து அபாயம்
Advertisement
Advertisement