மாமல்லை வேக கண்காணிப்பு சாதனங்கள் வேறு இடங்களுக்கு மாற்றியமைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி காணொளி நிகழ்வு கண்டறியும் சாதனங்கள், அதே சாலையின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

சென்னை அக்கரை - புதுச்சேரி இடையே, கிழக்கு கடற்கரை சாலையாக முன் அமைந்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்தது.

அக்கரை - மாமல்லபுரம் இடையே மட்டும், நான்குவழிப் பாதையாக இருந்தது. இத்தடத்தில் விபத்துகள் அதிகரித்தது.

விபத்தை தவிர்க்க கருதி, 2021ல், சாலை நிறுவனம் நட வடிக்கை மேற்கொண்டது.

மாமல்லபுரம் புறவழி சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு, பூஞ்சேரி சந்திப்பு, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில், 'ஆட்டோமெடிக் வீடியோ இன்சிடெண்ட் டிடெக் ஷன் சிஸ்டம்' எனப்படும் தானியங்கி காணொளி நிகழ்வு கண்டறியும் சாதனம், 'வேரியபிள் செசெஜ் டிஸ்பிளே சிஸ்டம்' எனப்படும் பல தகவ ல்கள் அறிவிப்பு திரையிடல் சாதனம் உள்ளிட்டவற்றை அமைத்தது.

தானியங்கி காணொளி நிகழ்வு கண்டறியும் சாதனம் மூலம், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, மாமல்லபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு, பழைய சாலையை பெயர்த்து, புதிதாக அமைக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை மாற்றத்தின் காரணமாக, அதிவேக வாகனங்களை கண்டறியும் சாதனங்களை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அகற்றியது.

அவற்றை தேவனேரி, வடநெம்மேலி, திருவிடந்தை ஆகிய பகுதிகளிலும், தகவல் அறிவிப்பு பலகையை, மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கல்லுாரி பகுதியிலும் அமைத்துள்ளதாகவும், மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Advertisement