தினமலர் செய்தி எதிரொலி :பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

சாத்துார்:சாத்துாரில் தனியார் டவுன், மினி பஸ்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதால் பாதசாரிகள் , கடைக்காரர்கள் அவதிப்பட்டு வந்தனர் இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது .

இதனை தொடர்ந்து நேற்று சாத்துார் விருதுநகர் ரோட்டில் நெடுஞ்சாலை துறை ,டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால் தாய், எஸ்.ஐ., அசோக் குமார் ஆகியோர் தனியார் டவுன் பஸ் மினி பஸ்களை நிறுத்தி சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்ங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மூன்று பஸ்கள் மீதும் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிந்து போலீசார் ஏர் ஹாரன்ங்களை அகற்றினர்.

Advertisement