விளாம்பட்டியில் கட்சிக்கொடி, போஸ்டர், கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலை இல்லை: 60 ஆண்டுகளாக கடைபிடிக்கும் அதிசய கிராமம்
சிவகாசி:சிவகாசி அருகே விளாம்பட்டியில் கட்சிக்கொடி, போஸ்டர், கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலை இல்லாத அதிசய கிராமமாக உள்ளது.
சிவகாசி அருகே விளாம்பட்டியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பெரும்பாலும் பட்டாசு. தீப்பெட்டி. அச்சு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு 60 ஆண்டுகளாக அரசியல் கட்சி கொடிகள், கொடி கம்பங்கள், போஸ்டர் ஒட்டுதல், பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட அரசியல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இம்மக்கள் தடை விதித்துள்ளனர். இங்கு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஒரே ஒரு காந்தி சிலை மட்டுமே உள்ளது. மற்றபடி வேறு எந்த ஜாதி, அரசியல் தலைவர்களின் சிலை இங்கு வைக்கப்படவில்லை. தேர்தல் காலங்களில் வரும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கலாம். ஆனால் ஒலிபெருக்கி வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருதல் கூடாது. இதனை அனைத்து மக்களும் ஒற்றுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தல் அன்று ஓட்டளிக்கும் உரிமையை விட்டு தராமல் அந்தக் கடமையையும் நிறைவேற்றுகின்றனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கும், ஓட்டு சேகரிக்க வருபவர்கள் முன் அனுமதி கேட்டு தான் இங்கு வருகின்றனர்.
விளாம்பட்டி நாடார் உறவின்முறை தலைவர் பால குருசாமி கூறுகையில், இந்த ஊரில் எந்த காலத்திலும் ஜாதி சம்பந்தமாகவோ அரசியல் சம்பந்தமாகவோ எந்தவித சண்டையும் வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இதனால் அனைவரும் ஒற்றுமையாக கட்சிக் கொடி நடுதல், போஸ்டர் ஓட்டுதல் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளோம். மக்களிடையே தேவையில்லாத பிரச்னை வரக்கூடாது என்பதற்காக தற்போது வரை இதை கடைபிடிக்கின்றோம். என்றார்.
மேலும்
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
-
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்