நேற்று 'எனிமி' இன்று 'ப்ரோ'; பங்காளியான பகையாளி
அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிசாமியும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தினகரனும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தே.ஜ., கூட்டணியில் தினகரனின் அ.ம.மு.க.,வும் உள்ளது. ஆனாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தினகரனும் பரஸ்பரம் ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்து வந்தனர்.
இதுகுறித்து, கடந்த 3ம் தேதி நம் நாளிதழின் தேர்தல் களம் பகுதியில், 'ஊருக்கு பங்காளி; உள்ளுக்குள் பகையாளி' என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
இதையடுத்து, பழனிசாமி தன் பயணத் திட்டத்தை மாற்றி, சென்னை சைதாப்பேட்டையில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார். அதேபோல், தினகரனும் தன் பிரசாரத்தில் மாற்றம் செய்து, மதுரவாயல் அ.தி.மு.க., வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி - தினகரன் இடையே கடுமையான மோதல் இருந்தது. அதை சரிசெய்து, இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடுமையாக முயன்றதன் விளைவாக தான், கூட்டணி அமைந்தது.
ஆனால், உள்ளுக்குள் பகையை வைத்துக் கொண்டு, இருவரும் பரஸ்பரம் ஆதரித்து பிரசாரம் செய்வதை தவிர்த்தனர். இந்த விஷயம், டில்லி தலைவர்கள் கவனத்துக்கு சென்றது. அவர்களின் பேச்சுக்கு பின்னர்தான், இருவரும் மனம் மாறி, தற்போது ஆதரவாக பிரசாரம் செய்ய துவங்கி உள்ளனர்' என்றனர்.
வாசகர் கருத்து (9)
venugopal s - ,
09 ஏப்,2026 - 15:06 Report Abuse
தேர்தல் முடிவுகள் வந்ததும் மறுபடியும் அடிதடி தொடரும்! 0
0
Reply
முருகன் - ,
09 ஏப்,2026 - 15:04 Report Abuse
நாளை இருவரும் டெல்லியின் நிரந்தர....... கள்
. 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
09 ஏப்,2026 - 10:28 Report Abuse
தினகரனுக்கும் பழனிச்சாமி அவர்களுக்கும் இடையே பங்காளிகள் சண்டையும் இல்லை பகையாளி சண்டையும் இல்லை பண பங்கீடு சண்டை தான். இது தீராது மீண்டும் ஆரம்பிக்கும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். 0
0
Reply
E. Mariappan - CHENNAI,இந்தியா
09 ஏப்,2026 - 09:38 Report Abuse
அப்போ "மேல கேட்டு சொல்றேன் " திமுக விளம்பரம் தப்புன்னு நான் நினைச்சதை மாத்திக்க வேண்டும் போல 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
09 ஏப்,2026 - 09:38 Report Abuse
இந்த விட்டு கொடுத்தல் வெற்றியை கண்டிப்பாக கொடுக்கும் 0
0
Reply
பிரேம்ஜி - ,
09 ஏப்,2026 - 09:03 Report Abuse
பொதுமக்கள் இதையெல்லாம் பொருட் படுத்துவதேயில்லை! காசு அதிகம் கொடுப்பவர்களுக்கு ஓட்டு! தெளிவாகவே இருக்கிறார்கள்! வாழ்க சனநாயகம்! 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09 ஏப்,2026 - 08:09 Report Abuse
எது அசிங்கம். வைகோவை விடவா. திருமா பேசாத பேச்சா. ஏன் திமுக காங்கிரஸ் கூட்டணி எப்படி. இதுதான் அரசியல் 0
0
Pandi Muni - Johur,இந்தியா
09 ஏப்,2026 - 09:14Report Abuse
கேவலப்பட்டவங்களின் அரசியல் அது. 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
09 ஏப்,2026 - 07:29 Report Abuse
அசிங்கம் 0
0
Reply
மேலும்
-
ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வசந்தம் கார்த்திகேயன் வாக்குறுதி
-
தியாகதுருகம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
விஸ்வகர்மா கைவினைஞர் சங்கம் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு
-
தியாதுருகம் நகராட்சியாக தரம் உயர்த்த பாடுபடுவேன்: வி.சி., வேட்பாளர் மாலதி உறுதி
-
மரத்தில் வேன் மோதி 3 பேர் படுகாயம்
-
'ஜனநாயகன்' வெளியானதில் அமித்ஷாவின் பங்கு உள்ளது: சொல்கிறார் மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement