வேன் - பைக் மோதல் இருவர் படுகாயம்

மப்பேடு: மப்பேடு அருகே இருசக்கர வாகனம் மீது பயணியர் வேன் மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் முகுந்தன், 55. தக்கோலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, உடன் பணிபுரியும் சண்முகம், 50, என்பவருடன் 'யமஹா ஏரோக்ஸ்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மப்பேடு அடுத்த உளுந்தை அருகே வந்த போது, எதிரே வந்த 'மகேந்திரா டூரிஸ்டர்' வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement