500 கிராம் கஞ்சா பறிமுதல் காட்டுப்பாக்கம் வாலிபர் கைது
மணவாளநகர்: மணவாளநகரில் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காட்டுப்பாக்கம் வாலிபரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கே.ஈ.என்.சி., நடேசன் செட்டியார் பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மணவாளநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் முரளிதாஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 24, என தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், பிரகாஷை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.