அரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ. 29 லட்சம் காணிக்கை
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கைகள் எண்ணியதில், 29 லட்சத்து, 74 ஆயிரத்து, 636 ரூபாய் இருந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், இம்மாதம் மாசி மகத் தேர் திருவிழா நடந்தது. விழா முடிந்தவுடன் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் 13 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக ஏழு உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
நேற்று இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கைகள், எண்ணும் பணிகள் காலையில் துவங்கின.
துணை கமிஷனர் விமலா, தக்கார் உஷா நந்தினி ஆகியோர் தலைமையில், கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, கோவில்களின் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோர் காணிக்கைகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இதில், 29 லட்சத்து, 74 ஆயிரத்து, 636 ரூபாய் காணிக்கையும், தங்கம், 63 கிராம், வெள்ளி, 152 கிராம் இருந்தது.
மேலும்
-
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்
-
ஏப்., 15ல் நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
-
மாவட்டத்தில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம் ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
-
கர்நாடகாவில் காகிதமில்லா சட்டசபை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
சந்தை நிலவரம்: தங்கம் வெள்ளி
-
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அனைத்து மனுக்களும் ஏற்பு: 15ல் விசாரணை