7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்
புதுடில்லி: அமெரிக்காவின் தடையால் ஈரானின் கச்சா எண்ணெயை நம் நாட்டு நிறுவனங்கள் வாங்காமல் இருந்த நிலையில், தற்போது தடை விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, சீனாவுக்கு சென்ற ஈரான் கச்சா எண்ணெய் கப்பலை நம் நாட்டின், 'இந்தியன் ஆயில்' நிறுவனம் வாங்கியுள்ளது.
அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்கா சில ஆண்டுகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தது.
இதையடுத்து, ஈரானுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் எந்த ஒரு நாட்டின் நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களுடன் தொழில் நடத்த முடியாதபடி தடை விதிக்கப் பட்டது.
இதன் காரணமாக, நம் நாட்டு நிறுவனங்கள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை 2019ல் நிறுத்தின. இந்நிலையில், மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்தது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை தடுத்து கச்சா எண்ணெய்க்கு ஈரான் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதித்தது. இதன் காரணமாக எங்கெல்லாம் கச்சா எண்ணெய் இருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
அதன்படி ரஷ்யாவிடம் இருந்து நாம் ஏற்கனவே கச்சா எண்ணெய் வாங்கி வருகிறோம். இந்நிலையில், ஈரானில் இருந்து சீனாவுக்கு, 'ஜெயா' என்ற கச்சா எண்ணெய் கப்பல் சென்றது.
அதை நம் நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான, 'இந்தியன் ஆயில்' வாங்கியது. இதையடுத்து, அந்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து திரும்பி, நம் நாட்டின் ஒடிஷாவில் உள்ள பாரதிப் துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேலும், 'ஜோர்டன்' என்ற மற்றொரு ஈரான் கப்பலும் இந்தியாவை இறக்குமதி மையமாகக் குறிப்பிட்டுள்ளது.
இவை, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் கச்ச எண்ணெய் பாதிப்பால் அவறவர்களுடைய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வரும்போது நமது பிரதமர் அவருடைய சொந்த முயற்சியினால் நமக்கு கச்சா எண்ணெய் அபரிவிதமான கிடைத்து வருகிறது உலகமே வியக்கி நிற்கிறது இதுதான் பாரத பிரதமரின் உலக செல்வாக்கு.
இதுக்கெல்லாம் யார் காரணம்? துருப்பிடித்த இரும்புக்கை கோப்பால் சார்தான். ஆமாங்க, தமிழகத்தின் அப்பாதான். நம்புங்க. ரூபாய் இருநூறு கிடைக்கும்.
உலகமே பெட்ரோல் நெருக்கடியில் அந்த பதட்டறதை வைத்து விலையை சொந்தமக்களிடையேயே கூட அதிக விலையேற்றத்தை கொண்டுவந்தன. ஆளும் மத்திய அரசு அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் விலையேற்றம் இருக்காது என்றுதான் கூறினார்கள். கேஸ் பற்றாக்குறையை கூட இருக்காது, சற்றே தாமதமாகும் என்றுதான் கூறினார்கள். அந்த அளவுக்கு மக்களை கண்போல காத்துவந்த பெருமையெல்லாம் உலகத்திலேயே நம்ம மோடிஜியை தவிர யாருமே செய்யவில்லை. அனைத்து நாடுகளுமே அதிசயமாக பார்த்தார்கள். மோடிஜியின் புகழ் இன்னும் உலக மக்களிடையே உயர்ந்தது.இனியும் திமுகவோ காங்கிரஸோ மோடிஜியின் ஆட்சியை பற்றி குறை சொல்லி பயனே இல்லை. ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்களின் வருகை ஸ்டாலின் போன்றோரின் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டனவே.
இந்தியன் ஆயில் நிறுவனம் கப்பலை வாங்கியதா அல்லது கப்பலில் வந்த கச்சா எண்ணெய்யை வாங்கியதா?