விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
மதுரை: விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நிறைய பேர் உழைப்பு, ரத்தம், வியர்வை. அது லீக் ஆகிவிட்டது. அதில் ஒருவர் எனக்கே மெசேஜ் போட்டு இருந்தார். படம் வந்த பிறகு தியேட்டரில் போர் பார்ப்போம். இல்லையென்றால் அவர்கள் ஓடிடியில் வெளியிட்ட பிறகு போய் பார்ப்போம். முறையாக போய் பார்ப்போம். இந்த நேரத்தில் இது நடந்து இருக்க கூடாது.
முறையான விசாரணை நடத்தி எங்கு இருந்து லீக் ஆனதோ, அதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் சிபிஐ நோக்கியும் போகட்டும். இதில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். யாரும் லீக் ஆன படத்தை பார்ப்பதை தவிருங்கள். சினிமா தியேட்டரில் போய் பாருங்கள். உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்போம்.
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் ஒரு கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை முழுமையாக போலீசாருக்கு சொல்ல முடியாது.
விஜயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் முக்கியம் சைக்கிளில் வருகிறார், யாரோ மாலையை போட்டு இழுத்தார்கள், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிரசாரத்திற்கு வரும் தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர் சொல்ல கூடிய கருத்தை சொல்ல வேண்டும்.
இவ்வளவு ரோடு ஷோ பண்ணி, காரைக்குடியில் அவரால் பேச கூட முடியவில்லை. பிரசாரத்தில் விஜய் பேச வேண்டும். பிரசாரத்தை எல்லோரும் சூடாக செய்து கொண்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்; களம் எங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.
விஜய் அவருடைய கட்சி, ஓட்டு கேட்கிறார். யார் விஜய்க்கு போட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போகிறார்கள். திமுகவை மக்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், தேஜ கூட்டணி வேண்டும் என்று தான் சொல்வார்கள், அது தான் கள நிலவரம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து (10)
Rathna - Connecticut,இந்தியா
13 ஏப்,2026 - 18:03 Report Abuse
நேர்மையான பேச்சு. ஆனால் விஜய் ரசிகர்கள் இடத்தில கட்டுப்பாடு இல்லை என்பது வெளிப்படை. அது முழு அரசியல் கட்சியாக தேர்வு பெறவில்லை. இளவயது சினிமா ரசிகர் ரசிகை கூட்டமாக தான் உள்ளது. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 13:58 Report Abuse
ஒரு வேலை இவர் சொத்து எப்படி சேர்த்தார் என்று GEOGRAPHY CHEMISTRY எல்லாம் தெரியும் ... ஒழுங்கா தேர்தல் பரப்புரை பாரு இல்லை ஜெயிலுக்கு அவுப்புவோம் என்று மிரட்டி வேலை செய்ய வைத்து இருக்கலாம் 0
0
Reply
guna - ,
13 ஏப்,2026 - 13:41 Report Abuse
எதற்கு இப்படி பதறுகிறாய்.... 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 13:33 Report Abuse
கரூரில் இருந்து வந்துள்ள ரோபோக்களின் ப்யூஸை பிடுங்கி, பேட்டரியை கழற்றி அனுப்புவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு, 2 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு இழந்தவரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
நான் 5 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். யார் ரோபோ, யார் பேட்டரி என்று மக்களுக்கு தெரியும். அவர் கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர். அவரைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை." எனக் காட்டமாக பதில் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. என்ன அண்ணாமலை இது தேவையா 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 13:29 Report Abuse
சாத்தூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் ரோடு ஷோ மேற்கொண்டதை சாமானிய மக்கள் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றது பேசுபொருளாகி இருக்கிறது.
நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் மட்டும் அந்த வாகனத்தில் இரு புறமும் நடந்து வந்தனர். பாவம் இவர் நிலை 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 13:28 Report Abuse
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் ஆமா இவரை போல பேச சொல்லுகிறார் 0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
13 ஏப்,2026 - 13:25 Report Abuse
அண்ணாமலை நேர்மையான முறையில் வெளிப்டையாகத்தான் பேசுகிறார். அவர் இளைஞர். உள்குத்து எதுவும் இல்லாதமாதிரி தெரிகிறது . விஜய் சினிமா புகழை , வருமானத்தை விட்டுவிட்டு வந்தமாதிரி அண்ணாமலையும் உயரிய அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ் பதவியை விட்டுவிட்டு வந்திருக்கிறார்.
இதை விஜய் ரசிகர்கள் நேர்மறையாக புரிந்துகொள்ளவேண்டும். தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் விஜயின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படும்போது அவரிடம் நேரிடையாக பேசுவதற்கு அண்ணாமலையின் இந்த மாதிரியான பேச்சுக்கள் உதவியாக இருக்கும். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 ஏப்,2026 - 13:23 Report Abuse
அன்னே இப்ப தேர்தல் ஆணையம் உங்க கடிசியிடத்தில் தான் DMK விடம் இல்லை 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
13 ஏப்,2026 - 12:53 Report Abuse
அண்ணாமலை ஒருத்தர் தான் வெளிப்படையாக பேசுகிறார் 0
0
Reply
venugopal s - ,
13 ஏப்,2026 - 12:53 Report Abuse
தேர்தல் ஆணையம் தான் அனுமதி கொடுக்க வேண்டும்! 0
0
Reply
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்
Advertisement
Advertisement