பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
நமது சிறப்பு நிருபர்
தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி மீது கோபக்கணைகளை வீசுகிறார். ஆனால் மகன் அன்புமணி பாசத்தைக் காட்டி பரிதவிக்கிறார்.
ராமதாசுக்கு தெரியாமல் தேர்தல் ஆணையத்திற்கு ஏதேதோ ஆவணங்களைக் கொடுத்து கட்சியையே கைப்பற்றிக்கொண்டார் அன்புமணி. கட்சி கையை விட்டு போன பிறகு தான் ராமதாசுக்கு விஷயமே தெரிய வந்தது. அதன் பிறகு கோபத்தில் கொந்தளித்த ராமதாஸ், மகன் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதும், அவர் இடத்தில் புதிய நிர்வாகியை நியமிப்பதும், எனது பெயரை இனிமேல் அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பதுமாக ஏகப்பட்ட எச்சரிக்கைகளை விடுத்தார்.
ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் அன்புமணி தனது அப்பாவை மரியாதை குறைவாக எங்கும் பேசவில்லை. அப்பா மீது பாசம் இருப்பதாக தொடர்ந்து காட்டிக்கொள்கிறார். தந்தை ராமதாஸை 'ஐயா' என்றே கூப்பிடும் அன்புமணி, அவரை சுற்றியுள்ளவர்கள் தான் தந்தையை தவறாக வழிநடத்துவதாக பேசி வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், ''ஐயாவிற்கு யாரையும் புண்படுத்தத் தெரியாது.
அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். சில நேரங்களில் அவருக்குத் தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன'', ''தவறான நபர்களின் ஆலோசனைகளால் கட்சி பின்னடைவைச் சந்திக்கிறது'', ''ஐயா எனக்குத் தந்தை மட்டுமல்ல, தெய்வம். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் கஷ்டப்பட்டதெல்லாம் போதும், இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறேன்'', ''எங்கள் உறவு அரசியல் கடந்தது; ஒரு மகனாக ஐயாவைப் பாதுகாப்பது என் கடமை'', என்றெல்லாம் பேசினார்.
அதே நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியை கடுமையாக விமர்சித்தே வருகிறார். ''என்னைத் தைலாபுரம் தோட்டத்தில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப் போலச் சிறை வைத்துவிட்டார்கள்'', ''அன்புமணி இப்போது எதையும் கேட்டு நடப்பதில்லை; அவராகவே எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்'', ''கட்சியில் பதவி வாங்கிக் கொண்டு வேலை செய்யாதவர்களை அன்புமணி தட்டிக்கேட்பதில்லை.
அவர் எல்லோரையும் அரவணைத்துப் போகிறேன் என்று சொல்லி, கட்சியை மழுங்கடிக்கிறார்'',
''நான் தெருவில் இறங்கிப் போராட நினைக்கிறேன், ஆனால் அன்புமணி என்னை உட்காரச் சொல்கிறார். அவருக்கு என் உடல்நிலை மீது அக்கறை இருக்கலாம், ஆனால் கட்சியின் வீரியம் குறையக்கூடாது'', ''அரசியலில் நிதானம் வேண்டும், அவசரம் கூடாது.
இன்னும் சிலருக்கு (அன்புமணியைக் குறிப்பிட்டு) பழுத்த அரசியல் அனுபவம் வரவில்லை'' என்று சாடுகிறார். நேற்று சேலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது ராமதாஸ் மயக்கம் அடைந்தார். இது பற்றி கேள்விப்பட்ட அன்புமணி மீண்டும் பாசத்தில் பொங்கினார். ‛‛ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அவரைச் சுத்தி இருக்கிறவங்களை சும்மா விட மாட்டேன்'' என்று எச்சரிக்கை விட்டுள்ளார்.
‛‛இவ்வளவு பாசம் இருப்பவர் ஏன் அப்பாவை தவிக்க விட்டு தனியே வந்தார். கட்சியை ஏன் கைப்பற்றினார். தனியாக ஏன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்'' என்று கேள்விகளை ராமதாஸ் ஆதரவாளர்கள் அடுக்குகின்றனர். இப்படி அப்பாவும் மகனும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வது அக்கட்சியினருக்கும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திரு அன்புமணிக்குதான் களத்தில் ஆதரவு உள்ளது என இப்போ வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. 86 வயதில் பெரியவருக்கு முடியவில்லை. அவர் பெருந்தன்மையாக திரு அன்புமணிக்கு ஒப்படைத்து விடலாம். இவருடன் கூடவே இருக்கும் திரு GK மணி அவர்கள் தனது மகனை வேறு ஒரு கட்சி வேட்பாளராக நிறுத்தியதை பார்த்தது கொண்டிருக்கும் அவல நிலை தேவையா? திரு அன்புமணி அவர்களும் தந்தையை அப்போலோ மருத்துவ மனையில் ஒரு மகனாக போய் விசாரித்து அவருக்கு வேண்டியதை செய்து கொடுத்தால் மக்கள் சந்தோஷ படுவர்.
இன்னொரு குடும்பக்கட்சி ......... வேரோடு சாய்ந்த மரங்களின் சாபம் ......
எல்லாம் வீட்டு நலன் சார்ந்த நாடகம்.
ஒரு மனைவிக்கு மேல் இருந்தால் பிரச்சனைகள் தான்
கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கை , கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் அபிமானத்தை மேலும் பூஸ்ட் செய்து அதிக தொகுதிகள் பெற்று கட்சியை வலுப்படுத்தவே
இவர்கள் இருவரும் நாடகம் நடத்துகிறார்கள். இவர்கள் சண்டை போடவில்லை என்றால் ராமதாஸ் திமுக பக்கம் சென்றிருப்பார். அன்புமணி கட்சியை உடைத்திருப்பார்.
தினகரனுக்கே எடப்பாடி அவர்கள் 11 தொகுதிகள் தான் தந்தார். கண்டிப்பாக அதிமுக பாமகவுக்கு 18 தொகுதிகள் தந்திருக்காது. பாமக கட்சிக்காரர்கள் பெரும்பாலானோர் விஜய் கட்சியை நோக்கி சென்றிருப்பார்கள். இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் .
இதைப் பார்ப்பது நேரம் வேஸ்ட்... தவிர்த்தல் நல்லது... ஆர்வமுள்ளவர்கள் அவங்க ஜாதி டிவியில் பார்க்கட்டும்...
2025 வருட கடைய்யசி 2026 ஆரம்பம் எவ்வளவு பொய் சொல்லி கொண்டு சென்று விட்டார்... இதில் நல் உள்ளங்களும் உண்டு கொடுமையான கொடூர குணமுடையவர்களும் அடங்குவர்
தந்தை உருவாக்கி வளர்த்த கட்சியை அபகரித்து தந்தையை காலி செய்த நவீன ஔரங்கசீப்தான் அன்புமணி எனும் அன்பில்லாதமணி
g NTR and taking over Telugu Desam..Full respect to NTR till his deathமேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்