நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
நமது நிருபர்
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரத்தில் மத்திய அரசின் கடிதத்தை வெளியிட தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது மத்திய அரசின் கடிதத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
'நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதம் குறித்து நான் தான் பேசினேன். கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது ஜனவரி 9ம் தேதி மத்திய அரசு செயலர் அனுப்பிய கடிதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பொய் பிம்பங்கள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதல்வர் ஸ்டாலினும், அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்.
மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
இறக்குமதி
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட.சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா?
இந்தியா இலக்கு
பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக 'ஊட்டச்சத்து பாதுகாப்பை' உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் 'பொருளாதார நிலைத்தன்மையை' அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆதாயம் தேட...
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார். நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.
விளக்கமளியுங்கள்
மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதல்வரம் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார்.
அரசியல் ஆதாயம்
அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதல்வரும், இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள்.
ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார். ஏனெனில், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே நோக்கம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நெல்லுக்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்க தொகையால் பிரச்சினை வரும் என்று ஸ்டாலின் கூறுகின்ற பொருளில் மத்திய நிதி அமைச்சரின் கடித வாசகம் இருக்கவில்லை. ஆனால் மத்திய அரசின் அமைச்சர் என்ற பொறுப்பில் அவர் இருப்பதால் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளையும் ஒவ்வொரு பொருளின் விளைச்சல் பற்றியும் அதற்கு மாநிலங்கள் நிர்ணயிக்கும் அனைத்து விலைகளும் ஊக்க விலை உள்பட எல்லாமே சரிசமமாக இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பது நியாயமே. அதில் எப்படி தவறு இருக்க முடியும்?
மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்த மூன்று மாதத்திற்கு பின் இந்த கடிதத்தை முதன் முதலாக ஏப்ரல் 11ம் தேதி தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகாரி கொடுத்த பின் தான் அவர் அறிந்தார் என்பதும் நம்ப கூடியதாக இல்லை. ஏனெனில் இதை கேரள முதல்வரே அப்போதே எதிர்த்தார் என்றும் ஸ்டாலின் கூறுகிறார். இந்த கடித விவகாரம் அவருடைய கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர பட்டிருந்தாலும் தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகள் மத்தியில் கூறினால் அரசியல் லாபம் கிடைக்கும்
என அவர் காத்திருந்தார் என எதிர்கட்சிகள் எண்ணினால் அதில் தவறேதுமில்லை. தேர்தல் காலத்தில் இதை வெளியிட்டு இதை பிரச்சனையாக மாற்றுவதே அவரது எண்ணமாக இருக்கலாம். மேலும் தன்னிடம் உள்ள கடிதத்தை அவரே உடனடியாக வெளியிட்டு இருக்கலாமே, ஏன் நிதி அமைச்சரை வெளியிட வைத்தார் என்பதும் அதிகப்படியான அரசியலே தவிர நிர்வாக தீர்வு அல்ல.
as per your opinion able to understand that TN chtalin wants to use this as a trump-card to play the politics
தமிழக முக்கிய மந்திரி எப்போ உண்மை பேசிருக்கார், இப்போ பேசறதுக்கு. வாய தொறந்தா பொய்தான்
ஹிந்திதான் தெரியாது என்றால் ஆங்கிலமும் தெரியவில்லை. மத்திய அரசு கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக்கூடாது என்று இல்லை. பதினைந்து லட்சத்தை வைத்து உருட்டினார். இப்போது அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் இந்த புது உருட்டு.
இவருக்கு தமிழே தகறாருங்க.அப்புறம் எங்க ஆங்கிலம், ஹிந்தி தெரியறது. எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து. ஏப்ரல் 23 தமிழகத்திற்கு தி மு க பாஷையில் சொல்லணும்னா விடியலை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு எந்த இடத்திலும் கூறவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஓட்டுக்களை பெற திமுக வழக்கமான அதன் பொய் செய்தியை மத்திய அரசுக்கு எதிராக பரப்புகிறது. ஏற்கனவே விவசாயிகள் திமுக மீது கோபமாக உள்ளார்கள்.
இருக்கு ஆனால் இல்லை
இது தான் அதன் சூட்சுமம்
நெல்லை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டும் அல்லவா
பொய் சொல்லியே அரசியல் பிழைப்பு நடத்தும் திராவிட முன்னேற்றக கழகத்தின் பொய் முகம் கிழிக்கப்பட்டுவிட்டது..
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தை உடனே வெளியிட்ட நிர்மலா சீதாராமன் அவர்கள், அந்த கடிதத்தை கேட்டவரால் படிக்க முடியுமா என்று யோசிக்க மறந்து விட்டார்.
எல்லாம் தமிழ்நாட்டின் தலை எழுத்து இவரெல்லாம் ....
இவனுக பொய் முகம் கிழிஞ்சு என்ன பயன். மக்கள் திருந்தி இவர்களுக்கு எதிராக வாக்களித்து தி மு க வை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபித்துக் காட்டி விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
என்னத்த நிரூபிச்சிருக்காரு. மூன்று மாதம் குறட்டை விட்டு தூங்கி விட்டு இப்போது எலக்சனுக்காக தேடி பிடித்து பேசுறாரு. கடிதத்தில் எந்த இடத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருப்பதை கொஞ்சம் சுட்டிக்காட்டுவீர்களா.
படிக்காத மேதாவிகள் திமுக வில் அதிகம் என்று நிரூபித்து உள்ளீர்கள்.
ஒரு பெண்மணி யிடம் வாங்கி கட்டி கொ ண்டுள்ளார் . அடுத்து அவரை அசிங்கமாக பேசுவதை எதிர்பார்க்கலாம்
எந்த பொருளையும் அதிகம் உற்பத்தி செய்தால் அதன் விலை குறையும். உதாரணம் தக்காளி. கிலோ 2 ரூபாய்க்கு கீழே போகிறது. அதேபோல தான் நெல்லும். விவசாய நிலங்களில் மாற்று பயிர்களை பண பயிர்களை பயிர் செய்வது, புத்திசாலித்தனம். மண்ணிற்கு ஏற்றாற்போல மஞ்சள், மிளகாய், பருப்பு வகைகள், உளுந்து, கரும்பு, மூலிகை வகைகள் நல்ல லாபத்தை தரும். இதைத்தான் மத்திய அரசு சொல்கிறது.
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், ஏன் ஒவ்வரு மூட்டைக்கும் ஒரு தொகை விற்பனையின் போது மறைமுக கலக்க்ஷன் செய்ய படுகிறது என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது. ஒவ்வரு விளைச்சலுக்கு பின்னால், நெல் ஏன் மழையில் நனைகிறது, விதையாக முளைப்பதை பற்றி அரசியல்வாதிகள் விளக்கினால் நல்லது. இதைத்தான் விவசாயிகள் கேள்வி கேட்க வேண்டும்.
கடிதம் வந்து மூன்று மாத காலம் ஆகிவிட்டது இப்போது கூவுகிறார் எந்த இடத்திலேயும் நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக் கூடாது என்ற வார்த்தையே இல்லை. பொய்யும் உருட்டும் திருட்டும் கலந்து போர்வையில் மறைத்தானே இறைவன் மனிதன் என்ற போர்வையில் மறைத்தானேமேலும்
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்