'தினமலர் - தமிழ் சங்கம் நாசிக்' இணைந்து மஹாராஷ்டிரா தமிழர்களை கொண்டாடுகிறோம்
மஹாராஷ்டிரா, நாசிக்கில் வாழும் தமிழர்களின் மனதில் எங்களது தமிழ் சங்கம் நாசிக் தனித்து இடம் பெற்றிருப்பதை போலவே, 'தினமலர்' நாளிதழுக்கும் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களில் தினமலர் நாளிதழுடன் இணைந்து 'தமிழ் சங்கம் நாசிக்' சார்பில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் தினமலர் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்கள் 350 பேருக்கு புத்தக பைகளும், வகுப்பறையில் கற்றல் மேம்பாட்டிற்காக ஒரு 'ஆண்ட்ராய்டு டிவி'யும் தினமலர் சார்பில் வழங்கப்பட்டன.
எங்கள் சங்கத்துடன் இணைந்து தினமலர் இங்குள்ள தமிழ் மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றி வருவதை நினைவுகூர்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம்.
நாளிதழ் மட்டுமின்றி, தினமலர் 'டிஜிட்டல்' தளமும் நாசிக் தமிழர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து ஒரு தேசிய தமிழ் நாளிதழாக மலரும் தினமலர், தன் 'பவள விழா'வை கொண்டாடி வரும் இவ்வேளையில், இம்மண்ணில் வாழும் அனைத்து தமிழர்களின் சார்பில் உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பி.ராமமூர்த்தி, தலைவர் தமிழ் சங்கம் நாசிக், மஹாராஷ்டிரா
மேலும்
-
தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
வெம்பக்கோட்டை பிரசாரத்தில் இரு கட்சியினர் மோதல்
-
சமத்துவ நாள் உறுதிமொழி
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
-
சூரிய ஒளி, கூர்மையான பற்களால் வரும் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு அவசியம்
-
விஜயபிரபாகரன் வெற்றி விருதுநகர் மக்களின் வெற்றி ;தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு