'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
கோவை:காசாகிராண்ட் சார்பில் 'கம்யூனிட்டி பிரீமியர் லீக்-2026' எனும் சி.பி.எல்., சீசன்-1 கிரிக்கெட் திருவிழா, சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளி அருகே மடாலயம் மைதானத்தில் கடந்த 4ம் தேதி துவங்கியது.
'ரெட் டென்னிஸ்' பந்து கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில், 16 அப்பார்ட்மென்ட் அணிகள் பங்கேற்றுள்ளன. வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் போட்டிகளானது 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.
'லீக்' போட்டியில் 10 ஓவரும், 'நாக் அவுட்' போட்டியில் 15 ஓவரும் வீசப்படுகிறது. நேற்று திவிசா டஸ்கர்ஸ் அணியும், யக்னயா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த திவிசா டஸ்கர்ஸ் அணியினர் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்தனர்.
யக்னயா பிளாஸ்டர்ஸ் அணியினரோ நான்கு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து, இவா தண்டர்ஸ் அணியும், ஸ்ரீவெட்சா மாவெரிக்ஸ் அணியும் விளையாடின.
இவா தண்டர்ஸ் அணியினர் 10 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 74 ரன் எடுக்க, ஸ்ரீவெட்சா அணியினர் 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். குபேரா தண்டர்ஹாக்ஸ் அணியும், ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
குபேரா அணியினர் 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்தனர். ராயல் கிங்ஸ் அணியினர் 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு