பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
.அன்னூர்:அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அருகம்பாளையத்தில், பழமையான பால பட்டாபிராமர் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் இருந்து முளைப்பாரி, விமான கலசங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
விமான கலசங்கள் கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
காலை 9:30 மணிக்கு, விமான கலசம், ஸ்ரீ பால பட்டாபிராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது.
ஏப்ரல் 13ம் தேதி காலை 7:00 மணிக்கு தாசர்கள் பந்த சேவை மற்றும் கபால பூஜை நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு பாலபட்டாபிராமருக்கும், பெருந்தேவிக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு 3,008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், இரவு 7:00 மணிக்கு கும்பகோணம் விட்டல்தாஸ் மகராஜ் ராம நாம சங்கீர்த்தன பஜனையும் நடைபெறுகிறது.
மேலும்
-
காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக பகுதி
-
வீடு இல்லாதோருக்கு வீட்டுமனை :பூண்டியில் ராஜேந்திரன் பிரசாரம்
-
கோடை பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
-
போஸ்டர் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி கைது
-
ஊசலாடும் கைப்பிடி இரும்பு கம்பி ;நல்வாழ்வு மையத்திற்கு வருவோர் அவதி
-
தனியார் நிறுவன கழிவுநீரால் முசரவாக்கத்தில் சுகாதார சீர்கேடு