நேரு கல்லுாரியில்  3,300  மாணவர்களுக்கு பணி ஆணை

கோவை: நேரு கல்விக் குழுமத்தில் வருடாந்திர பணியாணை வழங்கும் விழா, 'ரித்தி 2026' நடந்தது. 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் வாயிலாக 3,300க்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.

இவ்வாண்டு வேலைவாய்ப்பு சாதனைகள், நேரு கல்விக் குழுமத்தின் வலுவான கற்பிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக நேரு கல்வி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

குவின்பே நிறுவனத்தின் துணைத் தலைவர் அசோக் குமார், டிசிஎஸ் நிறுவனத்தின் முத்த ஆலோசகர் ராமசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்கள், தொழில்துறையில் வெற்றி பெற, புதுமையை நாடும் மனப்பான்மை, திறனாய்வு சிந்தனை, சிக்கல் தீர்க்கும் திறன், தெளிவான தொடர்புத்திறன்கள் முக்கியம் என்று எடுத்துரைத்தனர்.

கல்லுாரியின் செயல் இயக்குநர் நாகராஜா, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனர் அனிருதன், கல்லுாரி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

புட்நோட்: மாணவர்களுக்கு பணியாணை வழங்கும் விழாவை விருந்தினர்கள், கல்லுாரி நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

Advertisement