சமூக ஊடகம் வாயிலாக மோசடி அதிரடி சோதனையில் 600 பேர் கைது
புதுடில்லி: இணையவழி குற்ற வாளிகளை பிடிக்க டில்லி மாநகரப் போலீஸ் இரண்டு நாட்கள் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில், 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றவாளிகளைப் பிடிக்க, 'ஆப்பரேஷன் சை ஹாக் 4.0' என்ற சிறப்பு அதிரடி சோதனையை மாநகரப் போலீஸ் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தியது .
இந்தப் பிரம்மாண்ட அதிரடி நடவடிக்கையில், 600- பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 8,000- பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடக்கிறது. இந்த அதிரடி சோதனைக்கு 5,000 போலீசார் பயன்படுத்தப்பட்டனர். இதில், 499 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தென்மேற்கு டில்லியில் இருந்து, சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல் உட்பட பலர் சிக்கியுள்ளனர். கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement