வி.இ.டி., கலை அறிவியல் இருபாலர் கல்லுாரியில் சாதனையாளர் தினம்

ஈரோடு: ஈரோடு, திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இரு-பாலர்) கல்லுாரியில் 'சாதனையாளர் தினம் - 2026' நிகழ்ச்சி நடந்தது.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர் தலைமை வகித்து பேசினார். வி.இ.டி., கல்லுாரி நிர்வாகி பால-சுப்ரமணியன் வாழ்த்தி பேசினார். கல்லுாரியின் புல
முதன்மையர் முனைவர் லோகேஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் பழனிசாமி ஆகியோர் பாராட்டி பேசினர். பெங்களூருவை சேர்ந்த வேண்ட்டிவ் இன்டர்நேஷனல் நிறுவன உயர்மேலாளர் பூபதி ராஜரத்தினம் சிறப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கவுரவ விருந்தினராக வி.இ.டி., கல்லுாரியின் முன்னாள் மாண-வரும், மொடக்குறிச்சி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவருமான சக்தி கலந்து கொண்டார். முதல்வர் நல்லசாமி ஆண்டறிக்கை வா-சித்தார். சிறந்த ஆராய்ச்சியாளர் விருது 2 பேருக்கும், இளநிலை ஆராய்ச்சியாளர் விருது ஒருவருக்கும், சிறந்த பேராசிரியர்களுக்-கான விருது 3 பேருக்கும், பல்கலைக்கழக தங்கப் பதக்கம் வென்-றோர்களுக்கான விருது 5 பேருக்கும், பல்கலைக்கழகத் தரநிலை பெற்ற மாணவர்கள், 32 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
2026ம் கல்வியாண்டின் சிறந்த மாணவர்களுக்கான விருது மூன்றாம் ஆண்டு இளநிலை வணிக பயன்பாட்டியல் துறையை சார்ந்த மாணவர் ஸ்ரீநிதிஷ், மூன்றாம் ஆண்டு இளநிலை தகவல் தொழில் நுட்பவியல் துறையை சார்ந்த வினிதா, முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் வணிகவியல் துறையை சார்ந்த மாணவி சந்தியா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

Advertisement