இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்

சத்தியமங்கலம்: சட்டசபை தேர்தல் தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநில போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆசனுாரில் நடந்தது.


கோவை சரக டி.ஐ.ஜி., சுவாமிநாதன் தலைமை வகித்தார். தாள-வாடி, ஆசனுார் பகுதியில் உள்ள பதற்றமான பூத்கள் குறித்தும், பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். மேலும் கர்நாடக மாநில மது பானங்கள், போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஈரோடு எஸ்.பி.,கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகர் எஸ்.பி.,முத்து ராஜ் மற்றும் இரு மாநில போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement