மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
நமது சிறப்பு நிருபர்
சந்தனக்கட்டை கடத்தல் வீரப்பன் மகள் மேட்டூர் தொகுதியிலும், மனைவி கிருஷ்ணகிரி தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
1990களில் சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட வீரப்பன், போலீஸ் , வனத்துறை அதிகாரிகளை கொன்று கொடூர குற்றவாளியாக வலம் வந்தான். அவனைப் பிடிக்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநில போலீசார் இணைந்த கூட்டு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப் படையினரின் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு 2004ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 20 ஆண்டு கடந்த நிலையில், அவனது மகளும் மனைவியும் தேர்தல் அரசியலின் வாயிலாக, வீரப்பனின் வரலாற்றை மறுவரையறை செய்ய முயன்று வருகின்றனர். அச்சமூட்டும் ஒரு குற்றவாளி என்ற பிம்பத்திலிருந்து, தமிழ் உரிமைகளின் பாதுகாவலராக வீரப்பனை சித்தரிக்க இவர்கள் முற்படுகின்றனர். வீரப்பனின் மூத்த மகளான 35 வயதான வழக்கறிஞர் வித்யாராணி, மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
அதேவேளையில், வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் களத்தில் உள்ளார். இவ்விரு கட்சிகளுமே தமிழ் தேசியக் கொள்கையை முன்னிறுத்திச் செயல்படுபவை ஆகும். முன்னதாக, 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட வித்யாராணி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முத்துலட்சுமியைப் பொறுத்தவரை, 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியதன் மூலம் அரசியலில் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் அரசியல் களத்திற்குத் திரும்பியுள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் முத்துலட்சுமி, தனது தேர்தல் பிரசாரங்களில் விவசாயிகளின் துயரங்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்தே முக்கியமாகப் பேசி வருகிறார்.
2000 ஆண்டுகளாக என்று நீட்டி முழக்கி இட ஒதுக்கீடு பேசுவோர், ஒரு குற்றவாளியின் அடுத்த தலைமுறையை எப்படி ஏற்கிறார்கள்?
வீரப்பன் ஒரு கிரிமினல். அவனது வாரிசுகளும் அப்படித்தான். வாரிசுகல் டெபாசிட் இழக்க வேண்டும்
உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன் .....
கொள்ளையர்களால் மட்டுமே விவரமற்ற ஜனங்களை மிரட்டி ஆள முடியும் இது நீண்ட நெடிய வரலாற்று உண்மை
வீரப்பன் குற்றத்திற்கு உடந்தை வாரிசுகள். பொதுவாழ்வில் தகுதியான நபர் அவசியம். குறைபாட்டுக்கு காரணம் தேர்தல் ஆணையம், மத்திய அரசு அல்லது நீதிமன்றம் என்று பட்டிமன்றம் நடத்தி விடை காண வேண்டும்? அதிக வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் போது, வாக்காளர், வேட்பாளர் தகுதியை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க முடியும். தனி நபர் வாக்குரிமையை தணிக்கை செய்ய வேண்டும். எதற்கு எடுத்தாலும் நீதிமன்றம் வழக்காக மாற்றி அதிகாரிகளை அச்சத்தில் வைத்து வருகிறார்கள். அதிகாரிகள் மக்கள் நல நிர்வாக முடிவு செய்ய அஞ்சுவர்.?
வீரப்பனை விட கொடிய, வெள்ளை சட்டைகள், கரை வேட்டிகள் பல பதவிகளோடு நடமாடுகிறது. சாதி அரசியல் மற்றும் வோட்டு வங்கி அரசியல் கொடியவர்களை சிலை வைத்து கொண்டாடுகிறது. அடுத்தவன் சொத்து, அடுத்தவன் மனைவி, அடுத்தவன் பணம் உள்ளவன் தான் அரசியலில் இங்கே நிற்க முடியும்.
வீரப்பன் இருந்தவரை கர்நாடக, காவேரி தண்ணீரில் இந்த வில்லங்கமும் இல்லாமல் இருந்தது என்பது உண்மை . அதுமட்டும் இல்லாமல் காடும் சீராக வளர்ந்தது .
இதுலே என்ன அதிசயம் மணல் கடத்தல் கறான் கள்ள சாராயம் விற்றவன் எல்லாம் அமைச்சரா இருக்கும் பொழுது இது எல்லாம் ஒரு செய்தி
தன்மான தமிழன், திராவிட குலகொழுந்து, விடியலால் அணைக்கும் பாக்கியம் பெற்ற நம்ம பேரறிவாளனுக்கு யாரும் சீட் தரலியா
வீரப்பன் - ஒரு குற்றவாளியா அல்லது வேறு யாரும் அவரை இயக்கினார்களா என்பதே இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
குற்றவாளிகளாகவும் வன்முறையாளர்களாகவும் இருப்பதே அரசியலில் சேர்வதற்கு அடிப்படை தகுதி போலும். அதிலும் பெருவாரியான வேட்பாளர்கள் கோர்ட்டில் தங்கள் மீது இத்தனை வழக்குகள் உள்ளன என்று பெருமையாக முழங்கும் காட்சிகளை பார்க்கிறோமே
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அப்பாவி பழங்குடி பெண்களை.... பற்றி இங்கு யாரும் பேசுவதும் இல்லை எழுதுவதும் இல்லைமேலும்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்
-
ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஏப்.14 ல் இயங்காது