இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
நமது நிருபர்
அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை குறைந்ததால், சென்னையில் தாயும், மகளும் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கொளத்துார், ஜவஹர் நகரில் வசிப்பவர் விஜயலட்சுமி, 43; சமூக ஆர்வலர். அவரது மகள் ஸ்டெபி, 26; வழக்கறிஞர். அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த இருவரும், இந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளனர்.
தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் நிற்கும் கொளத்துார் தொகுதியில் 34 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்டெபி; படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது தாய் செங்கொடி விஜயலட்சுமி, ஆலந்துார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அன்பரசன், அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஸ்டெபி கூறியதாவது: வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி, இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக வாக்குறுதி தரும் திறனற்ற அரசியலை வெறுக்கிறோம். நாங்கள் எந்த வாக்குறுதியையும் தரப்போவதில்லை. எப்படி பயணிப்போம் என்பதை உறுதியாக காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இலவசங்களை நானும் வெறுக்கிறேன். வரிப்பணத்தில் நல்ல சாலை வசதி, உள்கட்டமைப்பு, தொழிவளர்ச்சி திட்டங்கள், ஏரி குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்தலாம். ஆனால் "வரி பிடுங்கி" என்பது சரியான வாதம் இல்லை. வரி இல்லாமல் எப்படி திட்டங்கள் இலவசங்கள் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியும்?. கேட்டால், அதான் அம்பானி, அதானி அப்புறம் முதலாளி வர்க்கம் இருக்கே, அவுங்ககிட்ட பிடுங்கிக்கலாமே என்று வசனம் பேசுவார்கள். முதலாளி வர்க்கம் பெரிய தொகைகளை வாரியாக கட்டுறாங்க, வருமான காட்டாமல் மறைத்தால் த.வெ.க தலைவர் மாதிரி தண்டத்தொகை கட்டசொல்லி நீதிமன்றமே சொல்லும் அளவுக்கு செல்கிறார்கள்.
அம்மா பெயர் விஜயலக்ஷ்மி பொண்ணோட பெயர் ஸ்டெபி . இன்னொரு கிரிப்டோ கெங் . எப்படியிருந்தாலும், அவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் தான் உண்மை சொல்லி இருக்கிறீர்கள்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் டாஸ்மாக் நாட்டு மக்கள் இலவசங்களுக்கு விலைப் போய் ஏறக்குறைய 20 ஆண்டுகளாகிவிட்டது.
குழந்தை திருமணமா. தாய்கும் சேய்கும் 17 வயது தான் இருக்கின்றது. விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருமணம்
இனி பெண்கள் விழிப்போடு இருப்பர்.
Bold venture..congrats...keep it up....whether you win or not, you should kindle public interest and talk about what a good governance should be , before election... let that message be spread before election..after election no body will hear or care for you... whatever you want to say, say it right now.....I will support you if I know your contact information...and give you some hints.....if at all you see this....
திருச்சபை ஆசிர்வாதம்
வாழ்த்துக்கள்.
Superb
வாழ்த்துக்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் சுயேச்சையாக களம் இறங்குவதைக்காட்டிலும் இலவசங்களால் ஏற்படும் பாதிப்பை ஆண்டுதோறும் part time ஆக மக்களுக்கு போதிக்க வேண்டும்.மேலும்
-
'வீரமரணம்' ராணுவ வீரருக்கு 33ம் ஆண்டு நினைவஞ்சலி
-
தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு
-
துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!
-
சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
-
2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
-
பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்