செல்வம் கல்லுாரியில் நிறுவனர் நினைவு விளையாட்டு விழா
நாமக்கல் :நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், நிறுவனர் நினைவு கோப்பை விளையாட்டு திருவிழா நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, 171க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில், கால்பந்து, கோகோ, கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சியில், செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பாபு தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகளை செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் முனைவர் கவித்ரா நந்தினி மற்றும் செயல் இயக்குனர் கார்த்திக் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
செல்வம் கல்வி குழுமத்தின் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர். செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு பரிசுகளுடன், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில், செல்வம் உடற்கல்வி கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.]
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்