உதயநிதி அரசியல் ஆளுமையாகிவிட்டாரா?
வியாஸன்
vyasan.pen@gmail.com
அறிவாலயத்தில், சமீபத்தில் நடந்த வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, “தொகுதியைப் பற்றிக் கேட்டனர்; பதிலளித்தேன். யோசித்து முடிவு சொல்வதாகத் தலைமை கூறியுள்ளது,” என்று மிக அடக்கமாகப் பேட்டியளித்தார்.
தி.மு.க.,வின் அதிகார மையமாகத் திகழும் ஒருவரிடம், தலைமை இப்படிச் சொல்வது என்பது, ஆஸ்கர் விருது வாங்கிய நடிகரிடம் 'ஸ்கிரீன் டெஸ்ட்' எடுப்பதைப் போன்ற ஓர் அரசியல் நாடகம்.
இந்த நேர்காணல் சடங்குகளைத் தாண்டி, உதயநிதி ஸ்டாலின் உண்மையிலேயே திராவிட அரசியலின் அசைக்க முடியாத ஆளுமையாக உருவெடுத்து விட்டாரா அல்லது குடும்பப் பின்னணி என்ற பிம்பத்திற்குள் மட்டுமே சுழல்கிறாரா?
ஆளுமை யார்?
அரசியலில் ஒருவர் ஆளுமையாகிவிட்டாரா என்பதை எப்படி கணிப்பது?
மக்களின் கவனத்தை ஈர்த்து, அதை ஓட்டாக மாற்றுவது தான் அரசியல். அப்படி அரசியலுக்கு வந்தவர்கள் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், தற்போது விஜய். உதயநிதியும் அவ்வாறே செய்ய முயற்சித்தார், ஆனால் அது எடுபடவில்லை.
சமூக சேவை, மக்கள் பணியில் ஈடுபட்டு, மக்களின் கவனத்தை ஈர்ப்பது அடுத்த வழி. மாவட்ட அளவில் செயல்படும் அரசியல்வாதிகள் இவ்வாறே கவனத்தை ஈர்க்கின்றனர். இதை, பெரிய அளவில் செய்வது மிகவும் கடினம்.
கருத்தாளுமையால் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும். அவ்வாறு அரசியலுக்கு வந்தவர்கள் தான் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி. கருணாநிதிக்கு வாத திறமையும் அரசியல் சாதுர்யமும் இருந்தன. எந்த ஒரு சிக்கலான அரசியல் விவாதத்தையும், தன் பேச்சாற்றலால் சமாளிக்கும் அறிவுஜீவித்தனம் அவரிடம் இருந்தது. அதற்கு, கொள்கைபிடிப்பும் பரந்த பொது அறிவும் வேண்டும். அப்படி தன்னிடம் இருக்கிறது என்று காட்டப்போய் தான், சனாதன தர்மம் பற்றி உதயநிதி கருத்துகளை உதிர்த்தார். அவை, வடமாநிலங்களில் 'இண்டி' கூட்டணிக்கே பெரும் தலைவலியாக மாறின. 'நீட்' தேர்வுக்கு எதிராக அவர் பேசிய பேச்சுகள் இன்றுவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுவதும், அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றன.
மேற்படி மூன்றும் இல்லாமல், முதல்வர் ஸ்டாலின், 40 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்து, அடிமட்ட தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் 'அரவணைப்பு அரசியல்' மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டவர். உதயநிதி, கட்சி தொண்டர்களை சந்திப்பதே அரிதாக உள்ளது.
இதெல்லாம் இல்லாமலே, 'புல்லட் ரயில்' வேகத்தில் வளர்ந்திருக்கிறார் உதயநிதி.
சாதனை?
கடந்த ஐந்தாண்டுகளில் விளையாட்டு துறை அமைச்சராகவோ, இரண்டு ஆண்டுகள் துணை முதல்வராகவோ, பிரமாண்ட திட்டங்கள் எதையாவது உதயநிதி நிறைவேற்றி காட்டியிருக்கிறாரா? அனைவராலும் பேசப்படும் திட்டம் எதையாவது தொடங்கியிருக்கிறாரா? பிற மாநிலங்களுடன் உள்ள பிரச்னைகளை தீர்த்துள்ளாரா? துணை முதல்வர் அந்தஸ்தில், தமிழகத்தின் பிரதிநிதியாக மத்திய அரசு நடத்தும் கூட்டங்களிலோ, சர்வதேச கூட்டங்களிலோ பங்கேற்றிருக்கிறாரா? குறைந்தபட்சம் அவருடைய தொகுதியில் பெரும் மாற்றம் கொண்டு வந்துள்ளாரா?
யாருக்கும் நினைவிருக்கும்படியாக எதையும் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
மீடியா
தேசிய அளவில், இளம் தலைவர்கள், மீடியா கேள்விகளை கையாள்வதில் திறமைசாலிகளாக இருக்கின்றனர். அண்ணாமலையோ, தேஜஸ்வி சூர்யாவோ, எந்த சிரமமான கேள்வி வந்தாலும் துணிச்சலுடனும் சாமர்த்தியத்துடனும் பதில் அளிக்கின்றனர். ஊடக துறையினரை மரியாதையுடன் கையாள்வதோடு, தங்களுக்கான முக்கியத்துவம் குறையாமலும் பார்த்துக் கொள்கின்றனர்.
உதயநிதியோ, ஊடகங்களை நேரடியாக சந்திக்க பயப்படுகிறார். இதுவரை ஒரு விரிவான பேட்டி கூட அவர் அளித்ததில்லை. அறிவாலயம் வாசலிலோ, வேறு பொது இடங்களிலோ மைக் நீட்டப்படும்போது, ஏதேனும் உப்புச்சப்பற்ற கருத்தை உதிர்ப்பது, ஜோக் அடிப்பது என்று தான் நடந்து கொள்கிறார். ஊடகங்கள் மீதும் அவர் வைத்துள்ள மரியாதை அவ்வளவு தான்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஊடகங்களை சலிக்காமல் சந்தித்து 'நியூஸ் மேக்கராக' திகழ்ந்த கருணாநிதியோடு ஒப்பிடும்போது, உதயநிதியை 'சோளக்கொல்லை பொம்மையாக' கூட கருத முடியவில்லை.
தி.மு.க.,விற்குள் உதயநிதி ஒரு வலிமையான தலைவர். முதல்வர் போக முடியாத இடங்களில் எல்லாம், துணை முதல்வர் தலைமையில் தான் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், அந்த வலிமையோ, முக்கியத்துவமோ அவரது சொந்தச் செல்வாக்கால் உருவானதா அல்லது மாற்று தலைவர்கள் எழ முடியாதபடி வடிவமைக்கப்பட்ட குடும்ப கட்டமைப்பால் வந்ததா?
தி.மு.க.,வில் உட்கட்சி ஜனநாயகம் என்பது, ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் ஆப்பிள் பழம் போன்றது. அதை பார்க்கலாம் ரசிக்கலாம், ஆனால் யாராலும் சுவைக்க முடியாது, உதயநிதியை தவிர!
ஊரான் பணத்தை கொள்ளையடித்து வாழுகின்ற திருட்டு குடும்ப வாரிசு, எந்த தகுதியும் திறமையும் இல்லாத கொள்ளையர்
திரிஷா இல்லாமல் அரசியலும் இல்லை வாழ்க்கையும் இல்லை.
திமுககாரன் என்றால் மக்கள் விரட்டி அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
அரசியலில் ஊமை ஆகிவிட்டார்
உதயநிதி முதலில் ஒரு ஆளாகட்டும். அதன்பிறகு அவர் ஆளுமையாகிவிட்டாரா என்ற கேள்விக்கு வரலாம்.
மக்களே ஒன்று கவனியங்கள் ...ஜேக்கப் விஜய் ஏன் உதை நிதி பற்றி பேசுவதில்லை...ஏனெனில் காசு கொடுத்த எஜமானர் உதை நிதி...மடை மாற்று கொள்ளை அடி
சொல் புத்தி மற்றும் சொந்த புத்தி இல்லாத ஒருவர்... தத்தி என அழைக்க படுவார். ஆனால் இவர் கருணாநிதி பேரன் ஆயிற்றே...செங்கல்லை காட்டி மேடையேறி நரிதனம் செய்தாலே ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார் . மேலும் பிரசாந்த் கிஸ்ஸர் போன தடவை உதவி செய்தார்
திறமையின்மைன்னு யார் சொன்னா? சக்கர நாற்காலி T20 கிரிக்கெட் கேப்டன் வினோத் பாபுவை வரவழைத்து பாராட்டினாரல்லவா ? (அப்பாவும் கூட பாராட்டினார் ).அந்த தங்க மனசு யாருக்கு வரும்?.
அமித்சா மகன் JAISHA மாதிரி ஸ்டாலின் மகன் உதயநிதி,இப்படியே போன நாடு நல்ல வரும்
இந்துக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும் கட்டாயமாக ஓட்டளிக்கவேண்டும்.
இந்துக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும் திமுகவிற்கு கட்டாயமாக ஓட்டளிக்கவேண்டும்.
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் கூடாது என சொல்லும்மேலும்
-
விமான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் ரூ.4,000 கோடியில் உத்தரவாத திட்டம்
-
குறைந்து வரும் வங்கி டிபாசிட் அதிகரிக்க ஆர்.பி.ஐ., ஆலோசனை
-
புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா நிபந்தனை
-
வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா செல்கிறது இந்திய குழு
-
நாட்டின் ஏற்றுமதி ரூ.80 லட்சம் கோடி
-
எட்டாம் கட்ட போராட்டம் தோல்வி; தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம்: தொழில்முனைவோர் கூட்டமைப்பு அறிவிப்பு