குடிநீர் கேன், வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'
நாமக்கல்: குடிநீர் கேன், வாகனங்களில், தேர்தல் நாள் குறித்தும், 100 சத-வீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும் விழிப்புணர்வு, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது.
தமிழகத்தில், வரும், 23ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபா-ளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள, ஆறு தொகுதிகளிலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாநக-ராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எய்திடும் நோக்கிலும், தேர்தல் நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடிநீர் கேன்கள் மற்றும் கேன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்-களில், விழிப்புணர்வு, 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணி மேற்கொள்ளப்-பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்து, 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, 'மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் கேன்களின் நிறுவனங்களின் மூலம், பொதுமக்களுக்கு வினியோ-கிக்கப்படும் குடிநீர் கேன்களில், தேர்தல் விழிப்புணர்வு, 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
அதையடுத்து, ஓட்டல்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பில்களில், 'எனது வாக்கு விற்ப-னைக்கு அல்ல', 'தேர்தல் நாள் ஏப்., 23' ஆகிய வாசகங்கள் உடைய முத்திரைகளை அச்சிட்டு வழங்கும் வகையில், ஓட்டல் மற்றும் மளிகை கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் விழிப்பு-ணர்வு முத்திரைகள் வழங்கப்பட்டன.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ், ரெட்-கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், வணிகர் சங்க பிர-திநிதிகள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்