மாரியம்மன் கோவிலில் அரச மரத்தின் மகிமை
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், வடக்கு வாயிலை ஒட்டி பழமையான அரசமரத்தின் கீழ் அஷ்டநாகர்கள் எழுந்தருளியுள்ளனர். அரசமரத்தின் நாகரை சுற்றி வந்து வழிபாடு செய்தால், காலசர்ப்பதோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் பெறுதல், திருமணம் விரைவில் கைகூடுதல், நரம்பு தளர்ச்சி முதலிய வியாதிகள் நீங்கப் பெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
இக்கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ அனந்தன் முதலான அஷ்ட நாகர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
ஸ்ரீ அனந்தன்: நாகதேவதைகளின் அரசன் இவராவார். பூமியைத் தாங்குபவர், பூமியின் சுழற்சி மையம் என்பதால், இவரை பாலபிஷேகம் செய்து குளிர்வித்தால், வீட்டு மனை, விவசாய நிலம் போன்ற அனைத்து நிலங்களும் தங்கும். புதிதாக இடம் வாங்கி வீடு கட்டுபவர்கள் வீடு, அஸ்திவாரம் தோன்டுதல் முதலான வேலைகளுக்கு முன் ஸ்ரீ அனந்தனை வழிபட்டு வருகின்றனர்.
ஸ்ரீ வாசுகி: பரம்பொருள் கண்ணன், சிசுபாலனிடம் காப்பாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட போது அழுத்தம் தாங்காமல் நசுங்கப் பெற்ற வாசுகிப் பாம்பு 'ஆலாலம்' என்னும் கொடிய விஷத்தை கக்கியது. அப்போது அதைக் கண்டு பயந்த அனைவரையும் காத்து அருள வேண்டி, இறைவன் அவ்விஷத்தை அமுதாக உண்டு அனைவரையும் காப்பாற்றினார்.
வாசுகிக்கும் தன் பழைய நிலை அடையவும், வழித்துணையாக பயணத்தில் பக்தர்களைக் காத்திடுமாறும் இறைவன் அருளினார்.
எனவே ஸ்ரீ வாசுகியை பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் பயணம் பாதுகாப்பானதாக அமையும். எனவே, வெளியூர், வெளிநாடு பயணம் செய்வோர் இவரை வணங்கி பயணத்தை துவக்கினால் பயணம் இனிதாய் இருக்கும் என்பது ஐதீகமாகும்.
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை