ஆனந்தம் சில்க்சில்  அதிகாரிகள் ரெய்டு

கடலுார்: கடலுார் ஆனந்தம் சில்க்சில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலுாரில் ஆனந்தம் சிலக்ஸ் உள்ளது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் உள்ள ஆனந்தம் சில்க்சில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதே போன்று, கடலுாரில் உள்ள ஆனந்தம் சில்க்சில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காலை 10:30 மணிக்கு சோதனை நடத்த வந்தனர். தொடர்ந்து, வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என, சோதனை நடத்தினர். இதன் காரணமாக கடைக்குள் வெளிநபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

Advertisement