முன்விரோதத்தில் கொலை;இளைஞரை கொன்ற மூவர் கைது

புதுடில்லி:முன்விரோதம் காரணமாக, கடந்த மாதம், பிரதீப் என்பவரை கொன்றதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கடந்த மாதம், 29ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய பிரதீப், இதுவரை வீடு திரும்பவில்லை. போலீஸ் நிலையத்தில் அவரின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி, போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அவுட்டர் நார்த் டில்லி மாவட்டத்தின் மங்கேஷ்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்த உடலை மீட்டு, போலீசார் விசாரித்தனர்.

அது, பிரதீப் உடையது தான் என்பதை அறிந்து, அவரை கொன்றவர்கள் யார் என போலீசார் விசாரித்தனர். அப்போது, அவருடன் சேர்ந்து மது அருந்தியதை அறிந்த போலீசார், மது அருந்திய மூவரை சுற்றி வளைத்து விசாரித்தனர். அதில், அவர்கள் மூவரும் சேர்ந்து, பிரதீப்பை கொன்றதை ஒப்புக் கொண்டனர்.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரின் மொபைல் போனை சிதைத்ததுடன், அவரின் முகத்தையும் சிதைத்து கொன்றதை ஒப்புக் கொண்டனர்.
அவரை கொன்றதாக இந்திரஜீத், சாகர், மோன்டி ஆகியோரை கைது செய்து, எதற்காக பிரதீப்பை அவர்கள் மூவரும் கொடூரமாக கொன்றனர் என விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட தகவலின் படி, முன்விரோதம் காரணமாகவே அவர்கள் பிரதீப்பை கொன்றதாக கூறினர்.

Advertisement