உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மூதாட்டி பலி: 5 பேர் 'அட்மிட்'
மரக்காணம்: மரக்காணம் அருகே, உணவு ஒவ்வாமையால் மூதாட்டி இறந்தார். ஐவர் சிகிச்சையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், குரும்புரத்தை சேர்ந்தவர் ராதா, 65. இவரது மகன் ராஜசேகர், 35. மனைவி ராஜேஸ்வரி, 30. இவர்கள் மகள் விஷ்ணுபிரியா, 9. ராஜசேகரின் மாமியார் குப்பு, 55. மைத்துனர் ராஜி, 35. நேற்று முன்தினம் மதியம், மீன்குழம்பு சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
அன்றிரவு, 8:30 மணிக்கு அதே மீன்குழம்பை சாப்பிட்டு, உறங்கினர். அதிகாலை, 3:45 மணிக்கு, 6 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராதா இறந்தார்.
மற்ற, 5 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று உயர்வு; இன்று சற்று சரிவு; தங்கம் விலை சவரனுக்கு 200 குறைவு
-
தேர்தல் களத்தில் நிலவரம் என்ன? துல்லிய தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
Advertisement
Advertisement