மாணவர்களை திட்டிய ஹெச்.எம்., துாக்கியடிப்பு
ஆம்பூர்: மது போதையில் மாணவர்களை ஆபாசமாக பேசிய தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் சுகுமார், 59; அதே பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார். நேற்று, பள்ளிக்கு மது போதையில் சென்றவர், மாணவ - மாணவியரை ஆபாசமாக திட்டியுள்ளார்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆம்பூர் டவுன் போலீசார், வட்டார கல்வி அலுவலர் பீட்டர் ஆகியோர், அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் சுகுமாரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, வட்டார கல்வி அலுவலர் பீட்டர் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement