இ - மெயில் மிரட்டல் எதிரொலி:சட்டசபையில் பாதுகாப்பு கெடுபிடி
புதுடில்லி:டில்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த வளாகம் முழுவதும் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த திங்கள் கிழமை காலை, 8:14 மணிக்கு, டில்லி சட்டசபையுடன் தொடர்புடைய சபாநாயகர் துவங்கி, தலைமைச் செயலகம் வரை அனைத்து தரப்பினருக்கும், சட்டசபை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் இ - மெயில் வந்தது.
அதையடுத்து, அந்த வளாகங்கள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில், அது, புரளி என தெரிய வந்தது. இந்நிலையில், அந்த வளாகம் முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. எங்கிருந்து அந்த மிரட்டல் இ - மெயில் வந்தது என்பது தொடர்பாக, தகவல் தொடர்பு வல்லுனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுபோல, சட்டசபை வளாகம், பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டு, உள்ளே - வெளியே செல்வோர் கண்காணிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement