தேர்தல் வழக்கு வாபஸ் விவகாரம் :பன்னீருக்கு ஐகோர்ட் நிபந்தனை
சென்னை:நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்பப் பெற ஆட்சேபனைகள் உள்ளதா என்பது குறித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிடும்படி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து, 66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வந்தார். தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த பன்னீர்செல்வம், தற்போது நவாஸ்கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில், 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், ஆட்சேபங்கள் கோரி அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதற்கு ஆட்சேபனைகள் உள்ளனவா என்பது குறித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிடும்படி, பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
***
மேலும்
-
கருவறை முதல் கல்லறை வரை எனக்கு அ.தி.மு.க.,தான்: திருமங்கலம் தொகுதியில் உதயகுமார் உருக்கம்
-
சாதனை முதல்வர் கரத்தை வலுப்படுத்துங்கள் :வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம்
-
மனதை ஒருங்கிணைத்தால் வாழ்வில் மகத்துவம் பெறலாம்: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா அறிவுரை
-
மக்களுக்காக சிந்திக்கும் முதல்வரை தேர்வு செய்யுங்கள்: மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம்
-
பஞ்சாங்க படண பூஜை
-
நிர்வாகிகள் தேர்வு