சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

கரூர்:கரூரில், சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று, பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூர் ஜவஹர் பஜாரில் இயங்கி வரும், சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் நேற்று மாலை, வருமான துறை அதிகாரிகள் இரண்டு பேர் சோதனை நடத்தினர்.

அப்போது, கரூர்-கோவை சாலை கோவிந்தம்பாளையத்தில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், 43, வீட்டிலும், மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement