சிறுமிக்கு தொல்லை; 3 பேருக்கு 20 'ஆண்டு'

சேலம்:சேலம் மாவட்டம், ஆணையம்பட்டியை சேர்ந்தவர்கள் அங்கமுத்து, 30, ராஜா, 50, முகுந்தன், 24. கூலித்தொழிலாளிகளான இவர்கள், 2018 டிச., 23ல், அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஆத்துார் மகளிர் போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி விசாரித்து, அங்கமுத்து, ராஜா, முகுந்தன் ஆகியோருக்கு, தலா, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா, 1 லட்சம் ரூபாய், முகுந்தனுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டார்.

Advertisement