பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி

பொள்ளாச்சி: சட்டசபை தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் - 13 பேர், வால்பாறையில் - 6 பேர், கிணத்துக்கடவில் - 5 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம், 30ம் தேதி துவங்கியது. கடந்த, 6ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது.

பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், மொத்தம் 23 பேர், 34 மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், வேட்பாளர்களின் கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள், சரியான ஆவணங்கள் இல்லாத சுயேட்சைகள் உட்பட ஒன்பது பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், ஒருவர் வாபஸ் பெற்றார். இந்நிலையில், 13 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் விபரம் வருமாறு:

ஆறுச்சாமி (பகுஜன் சமாஜ்) - யானை, செந்தில்குமார் (நாம் தமிழர்) - ஏர்சுமக்கும் உழவர், நித்தியானந்தன் (தி.மு.க.,) - உதயசூரியன், பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.,) - இரட்டை இலை, ராமநாதன் (த.வெ.க.,) - ஊதல் (விசில்), சுயேட்சைகள் கார்த்திகேயன் - ஈட்டி எறிதல், நாகராஜ் - பென்ச், நித்தியானந்தம் - காலுறைகள், நித்தியானந்தன் - நழுவடைப்பச்சட்டம் (ஷட்டர்), ஜெயபிரதாப் - சிவிகை, ஜெயராம் - டென்னிஸ் மட்டையும் பந்தும், எம்.ஜெயராம் - தேநீர் வடிகட்டி, எம்.ஜெயராமன் - கண்காணிப்பு கேமரா என, சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வால்பாறை சட்டசபை (தனி) தொகுதியில், போட்டியிட 16 பேர் மொத்தம், 29 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 6 வேட்பாளர்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வால்பாறை சட்டசபை தொகுதியில் சுயே., வேட்பாளர்கள் இருவர் உட்பட, ஆறு பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் விபரம் வருமாறு:

உமாதேவி (நாம் தமிழர்) - ஏர்சுமக்கும் உழவர், சுதாகர் (தி.மு.க.,) - உதயசூரியன், லட்சுமணசிங் (அ.தி.மு.க.,) - இரட்டை இலை, ஸ்ரீதரன் (த.வெ.க.,) - ஊதல் (விசில்), பெருமாள் (சுயே.,) - கிரிக்கெட் மட்டை, லட்சுமி (சுயே.,) -- மின்கம்பம், என சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில், 29 பேர் மொத்தம், 43 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மாற்று வேட்பாளர்கள் உட்பட, 24 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஐந்து பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் விபரம் வருமாறு:

சபரி கார்த்திகேயன் (தி.மு.க.,) - உதயசூரியன், தாமோதரன் (அ.தி.மு.க.,) - இரட்டை இலை, விக்னேஷ் (த.வெ.க.,) - ஊதல் (விசில்), பானுப்பிரியா (நாம் தமிழர்) - ஏர்சுமக்கும் உழவர், மாரியப்பன் (கன சங்கம் கட்சி) - , என சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement