வாக்காளர்களை 'கவனிக்க' தனியார் ஏஜன்சி தயார்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., த.வெ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் மாவட்டத்தில்9 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி முழுவதும், வாக்காளர்களை கவனிக்க, பல்வேறு திட்டங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவனித்ததில் குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை எனவும், பல இடங்களை அவர்களை கண்டு கொள்ளவே இல்லை எனவும், குறிப்பிட்ட கட்சி தலைமைகளுக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில், அந்தந்த பகுதி வார்டு செயலா ளர்கள் மூலம் தனியார் ஏஜன்சி அலுவலர்கள் நேரிடையாக சென்று குறிப் பிட்ட வாக்காளர்களை 'கவனிக்க'முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

-நமது நிருபர்-:

Advertisement