கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
காட்டுமன்னார்கோவில்: ஆயங்குடியில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து தேர்தல் புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவி ல் அடுத்த ஆயங்குடி மேலபக்க துறையில் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் மேலபக் கத் துறை பிரதான சாலையான ஹூசைன் தெருவில், சாலை போட கருங்கல் ஜல்லி கொட்டினர்.
பல மாதங்கள் ஆகியும் சாலை போடாமல் ஜல்லி குவியலாக கிடப்பதால் போக்குவரத்தில் சிரமம் நீடிக்கிறது. இந்நிலையில் அந்த தெருவில் சாலை போட்டு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கணக்கு காட்டியதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசு அதிகாரிகளை கண்டித்து, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், இந்த பகுதிக்கு யாரும் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம் என விளம்பர தட்டி வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., சங்கர், துணை தாசில்தார் பழனி, இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, எஸ்.ஐ., சையத் அப்சல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பி.டி.ஓ., சங்கர் தேர்தல் முடிந்து விரைவில் சாலை அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என எழுதி கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
மேலும்
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி