கழிவறைக்குள் புகுந்தவரை குத்தி கொன்ற இருவர்
புதுடில்லி,
சாலையில் செல்லும் போது ஏற்பட்ட மோதலில், நேபாளி ஒருவரை விரட்டிச் சென்று, கழிவறையில் பூட்டிக் கொண்ட போதும் அவரை கத்தியால் குத்திக் கொன்ற இருவரில் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளார்.
வட மேற்கு டில்லியின் சாலை ஒன்றில், யார் முந்திச் செல்வது என்பது தொடர்பாக, நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், 27, என்பவருக்கும், டானிஷ், 19, அவருடன் பைக்கில் சென்ற சிறுவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அந்த இருவரும், சந்தோஷை தாக்கினர். பதிலுக்கு அவரும் இருவரை தாக்கினார்.
எனினும், தாக்குதல் தொடர்ந்ததால், உயிர் பிழைக்க, வசிப்பூர் அருகே உள்ள கழிவறைக்குள் தப்பி ஓடினார். அங்கும் அவரை இருவரும் துரத்திச் சென்றனர்.
கழிவறை உள்ளே சென்று பூட்டிக் கொண்ட அந்த நேபாள நாட்டின் நபரை, இழுத்து வெளியே போட்டு, கத்தியால் குத்தினர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் படி அங்கு வந்த போலீசார், டானிஷ் என்ற அந்த வாலிபரை பிடித்தனர். தப்பியோடி, தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர். சந்தோஷ் கொல்லப்பட்டதை அறிந்த அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர், 'நேபாள நாட்டிலிருந்து வந்து, 15 ஆண்டுகளாக டில்லியில் இருக்கிறோம். யாருக்கும், எந்த தீங்கும் செய்ததில்லை. இப்படி நடந்து விட்டதே' என அழுதார்.
மேலும்
-
ஓட்டு போட்டதை படம் எடுத்து வலைதளத்தில் பரப்பியவர் மீது வழக்கு
-
ரகளை செய்த வாலிபர் கைது
-
ஆனந்தம் சில்க்சில் அதிகாரிகள் ரெய்டு
-
மொபைல் பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு
-
ஓட்டுப்பதிவு அதிகரிப்பால் அரசியல் கட்சிகள்... கலக்கம்:தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் திக்... திக்...
-
எனது சாதனைகளை மறைக்க முயற்சி ;வி.சி.க., எம்.எல்.ஏ., மீது அருண்மொழி தேவன் 'அட்டாக்'